நாய்க்குட்டியை தாக்கிய பக்கத்து வீட்டுக்காரரை கோடாரியால் வெட்டிக் கொன்ற கொடூரம்!

செல்ல நாயைத் தாக்கியதாகக் கூறி ஒருவரை பக்கத்து வீட்டுக் காரர் தாக்கியதில் அவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.


காஸிப்பூர் நகரைச் சேர்ந்தவர் மகாஜன் இவரிடமும் இவரது மனைவியிடமும் பக்கத்து வீட்டுக் காரரான பிபாய் லால் என்பவர் தனது நாயைத் தாக்கி விட்டதாகக் கூறி கடந்த சனிக்கிழமை சண்டையிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் பிபாய் லாலின் மகன் சுரேஷ், மகாஜனை  சந்தித்து மிரட்டியதாகவும் அப்போது வாக்குவாதம் முற்றியதையடுத்து மகாஜனை சுரேஷ் கோடரியால் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் படுகாயம் அடைந்த மகாஜன் காஸிப்பூரில் உள்ள லால் பகதூ சாஸ்திரி மருத்துவமனைக்கும் அங்கிருந்து மேல் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டு குருதேஜ்பகதூர் மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால் சிகிச்சை பலனின்றி பகதூர் உயிரிழந்தார். இந்நிலையில் மகாஜனின் மனைவி கிருஷ்ணாவதி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சுரேஷை கைது செய்துள்ளனர். அவனிடம் இருந்து கோடரியும் கைப்பற்றப்பட்டுள்ளது.