கொட்டித் தீர்க்கும் மழை! சளைக்காமல் பைக் பயணம்! ஜக்கி வாசுதேவ் எங்கு செல்கிறார் தெரியுமா?

தலகாவேரியில் இருந்து கொட்டும் மழையுடன் தொடங்கிய சத்குருவின் மோட்டர் சைக்கிள் பயணம்.


காவேரி கூக்குரல் இயக்கத்தில் அரசு மற்றும் விவசாயிகளின் பங்களிப்பை அதிகரிப்பதற்கான 3,500 கி.மீ மோட்டர் சைக்கிள் பயணத்தை கொட்டு மழையுடன் தலகாவேரியில் சத்குரு இன்று (செப்.3) தொடங்கினார். 

தலகாவேரியில் இருந்து புறப்படும் போது சத்குரு கூறியதாவது:

காவேரியின் ஊற்றிடமான தலைகாவேரியில் இருந்து இந்த பயணத்தை தொடங்குகிறோம். பருவமழை பேரற்புதமாய் கொட்டி தீர்க்கிறது. எலும்புகளும் நனைந்திட பயணித்துக் கொண்டிருக்கிறோம். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் சவால் மிகுந்த இந்த பயணத்தில் என்னுடன் பயணிக்க பலரும் உறுதியுடன் இருப்பது பாராட்டுக்குரியது. இந்த மழையை மண்ணுக்குள் அனுப்ப மரங்கள் அவசியம். இவ்வாறு சத்குரு கூறினார். 

தலகாவேரியில் இருந்து மோட்டர் சைக்கிள் ஓட்டுநர் குழுவினருடன் புறப்பட்ட சத்குரு மைசூரு, மடிகேரி, ஹுன்சூர், மைசூரு, மண்டியா, பெருங்களூரு, ஓசூர், தர்மபுரி, மேட்டூர், ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், புதுச்சேரி வழியாக செப்.15-ம் தேதி சென்னைக்கு செல்கிறார். அவர் பயணிக்கும் காவேரி வடிநிலப் பகுதியில் 35-க்கும் மேற்பட்ட இடங்களில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கும் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்த ‘காவேரி கூக்குரல்’ இயக்கம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் காவேரி நதிக்கு புத்துயிரூட்டவும் தொடங்கப்பட்டுள்ளது. இது ஈஷா அவுட்ரீச் மேற்கொள்ளும் 2-வது நதி மீட்பு களப் பணியாகும். இவ்வியக்கம் கர்நாடகம் மற்றும் தமிழகத்தில் உள்ள காவேரி வடிநிலப் பகுதியில் அமைந்துள்ள விவசாய நிலங்களில் அடுத்த 12 ஆண்டுகளில் 242 கோடி மரங்களை நட இலக்கு நிர்ணயித்துள்ளது.

இந்த மரங்கள் எல்லாம் அந்தந்த விவசாய நிலங்களில் இருக்கும் தண்ணீர், மண், காலநிலை மற்றும் விவசாயியின் பொருளாதார தேவையின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து வழங்கப்படும். மேலும், விவசாயிகளே தங்கள் நிலங்களில் நேரடியாக மரங்கள் நடுவார்கள். வேளாண் காடு வளர்ப்பு முறைக்கு மாறும் விவசாயிகளின் வருமானம் 5 முதல் 7 ஆண்டுகளில் 300 சதவீதம் முதல் 800 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

ஏராளமான திரை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் மற்றும் வணிக தலைவர்கள் என பல தரப்பினரும் காவேரி கூக்குரல் இயக்கத்துக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர். மேலும், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் இருந்தும் பெருத்த வரவேற்பு கிடைத்து வருகிறது.

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநில அரசுகள் வேளாண் காடு முறைக்கு மாறும் விவசாயிகளுக்கு மானியம் வழங்க சம்மதம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதம் இவ்வியக்கம் குறித்து இரு மாநிலங்களில் 6,500-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 2 லட்சத்து 70 ஆயிரம் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.  

காவேரி கூக்குரல் இயக்கத்தின் மூலம் ஒரு மரம் நடுவதற்கு ரூ.42 நன்கொடை பெறப்படுகிறது. நன்கொடை வழங்க விரும்புபவர்கள் cauverycalling.org என்ற இணையதளம் மூலம் வழங்கலாம்.

சத்குருவின் பயண விவரம்:

தலகாவேரி - செப்.3 – காலை 11 மணி – பயணம் தொடக்கம்

மடிகேரி – செப்.3 – பிற்பகல் 3.30 மணி – கிரிஷ்டல் ஹால், சுதர்சன் சர்க்கிள் அருகில்

ஹூன்சூர் – செப்.4 – மாலை 4 மணி – கவுரம்மா புட்டசாமி, ஹுன்சூர்

மைசூரு – செப்.5 – மாலை 6 மணி – ஆம்பி தியேட்டர், மனசகன்கோத்ரி

மண்டியா – செப்.6 – மாலை 4 மணி – அம்பேத்கர் பவன்

பெங்களூரு – செப். 8 – மாலை 5.30 மணி – திருபுரவாசினி அரண்மனை மைதானம்

ஓசூர் – செப்.11 – காலை 9.30 மணி – அதியமான் கல்லூரி

தர்மபுரி – செப்.11 – பிற்பகல் 3 மணி – மில்லினியம் பள்ளி

மேட்டூர் – செப்.12 – காலை 10.30 மணி – டேம் பார்க்

ஈரோடு – செப்.12 – பிற்பகல் 3 மணி – கொங்கு கன்வென்சன் சென்டர்

திருச்சி – செப்.13 – பிற்பகல் 12 மணி – கலை அரங்கம் மஹால்

தஞ்சாவூர் – செப்.13 – மாலை 7.30 மணி – மஹாராஜா மஹால்

திருவாரூர் – செப்.14 – காலை 11.15 மணி – விவசாயி சங்க தலைவர்களுடன் சந்திப்பு – வணிகர் வர்த்தக சங்கம்

புதுச்சேரி – செப்.15 – காலை 7.30 மணி - கம்பன் கலை அரங்கம்

சென்னை – செப்.15 – மாலை 4 மணி