விழுப்புரம் திமுக வேட்பாளர் ரவிக்குமார் யார் தெரியுமா?: குழந்தை நவீனாவை உயிரோடு எரித்த காமக் கொடூரனுக்காக போராடியவர்!

விழுப்புரத்தில் பள்ளி செல்லும் மாணவி நவீனா ஒரு நாடகக் காதல் கயவனால் உயிரோடு எரித்து படுகொலை செய்யப்பட்டார். அந்த அயோக்கியனுக்கு ஆதரவாக விழுப்புரத்தில் போராட்டம் நடத்தியவர் தான், தற்போதைய விழுப்புரம் திமுக வேட்பாளர் ரவிக்குமார் ஆகும்!


நடந்தது என்ன?"

விழுப்புரம் நகரில் பள்ளி செல்லும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததால் 2012 ஆம் ஆண்டில் இரண்டாண்டு சிறைத்தணடனை அடைந்தவன் 'நாடகக் காதல் போராளி' செந்தில். இந்த சமூக விரோதி, 2015 ஆம் ஆண்டில், குடிபோதையில் இரயிலில் விழுந்து, கை, கால் துண்டிக்கப்பட்டான். 

நாடகக் காதல் கும்பலைச் சேர்ந்தவர்கள் இவனை போராளியாக ஆக்கி - வன்கொடுமை சட்டத்தின் கீழ் பணம் பறிக்க திட்டமிட்டனர். "பத்தாம் வகுப்பு படிக்கும் 15 வயது வன்னியர் பெண்ணை 30 வயது தலித் செந்தில் காதலித்ததால் அவரின் வலது கை, கால் தூண்டிக்கப்பட்டதாக" அப்பாவி நவீனா குடும்பத்தினர் மீது, 3.7.2015 ஆம் நாளன்று பொய்யாக புகார் செய்ய வைத்தனர். 

மறுநாளே, புதிய தலைமுறை தொலைக்காட்சி இதை வைத்து ஒரு விவாதம் நடத்தியது. இதில் கொலையாளி செந்தில் நேரடியாக பங்கேற்றான். திமுக ஆதரவாளரான சுப.வீரபாண்டியன் காமக்கொடூரன் செந்திலுக்கு வக்காலத்து வாங்கினார்.

"திமுக வேட்பாளர் ரவிக்குமார் போராட்டம்"

தருமபுரி இளவரசன், ஓமலூர் கோகுல்ராஜ் வரிசையில் விழுப்புரம் செந்திலும் ஒரு சாதி ஒழிப்பு காதல் போராளி எனக் குறிப்பிட்டு, 10.7.2016 ஆம் நாளன்று, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் கண்டன உரையாற்றுபவராக ரவிக்குமார் பெயர் இடம் பெற்றிருந்தது.

அதன் பின்னர், ஒரு மாதம் கழித்து, 7.8.2015 ஆம் நாளன்று, மீண்டும் இதே செந்தில், கை கால் இழந்த நிலையிலும், பள்ளி செல்லும் பேருந்தில் ஏறி நவீனாவிடம் வம்பிழுத்தான். நவீனாவின் பெற்றோர் காவல்துறையிடம் புகார் அளித்தனர். செந்திலை மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தது பொலீஸ். அப்போதும் விசிகவினர் காமக்கொடூரன் செந்திலுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

"குழந்தை நவீனா எரித்துக்கொலை"

அந்த நம்பவம் நடந்து ஓராண்டு ஆவதற்குள் - 29.7.2016 ஆம் நாளன்று வீட்டில் தனது தம்பியுடன் நவீனா இருந்த போது, வீட்டிற்குள் நுழைந்த செந்தில், குழந்தை நவீனாவை ஒரேயடியாக தீவைத்து கொளுத்தி படுகொலை செய்தான்.

இவ்வாறாக விழுப்புரம் நவீனா படுகொலைக்கு காரணமான செந்திலுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டங்களை நடத்தியவர் தான் விழுப்புரம் திமுக வேட்பாளர் ரவிக்குமார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்!