பிரபல இயக்குனருக்கு இரண்டாம் தாரமாகும் மலர் டீச்சர் @ சாய் பல்லவி! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

நடிகை சாய் பல்லவியை, டைரக்டர் விஜய், 2வது திருமணம் செய்ய உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.


மதராசப்பட்டிணம், தலைவா உள்ளிட்ட படங்களை இயக்கியவர் டைரக்டர் விஜய். இவர், சில ஆண்டுகள் முன்பு, பிரபல நடிகை அமலா பாலை 2014ம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டார். இது காதல் திருமணம்தான் என்றாலும், சில ஆண்டுகளே அவர்கள் ஒன்றாக வாழ்ந்தனர். பின்னர், கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 2017ம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்வதாக ,அறிவித்தனர். 

இதன்பின், விஜய், வாட்ச்மேன், தேவி 2 உள்ளிட்ட படங்களை இயக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளார். இதற்கிடையே, பிரேமம், மாரி2 படங்களில் நடித்து பிரபலமான சாய் பல்லவிக்கும், விஜய்க்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளதாக, தகவல் வெளியாகி வந்தன. கரு எனும் படத்தில் சாய் பல்லவியை நாயகியாக வைத்து விஜய் இயக்கியிருந்தார்.

இந்நிலையில், சாய் பல்லவியை 2வது திருமணம் செய்ய விஜய் முடிவு செய்துள்ளதாக, தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. எனினும், இதனை டைரக்டர் விஜயின் குடும்பத்தினர் மறுத்துள்ளனர். இருவரும் நண்பர்களாக மட்டுமே பழகி வருகின்றனர். இதுபோன்ற அடிப்படையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதே போல் நடிகை அமலா பாலிடம் விஜய் நெருங்கிப் பழகிய போதும் கூட குடும்பத்தினர் இப்படி தான் தெரிவித்தனர். பிறகு அமலா பாலை விஜய் திருமணம் செய்தார். அது விவகாரத்தில் முடிந்தது. இந்த விவகாரத்தில் சாய் பல்லவியும் கூட அமைதி காத்து வருகிறார்.