நரம்புக்கு பலம் தரும் செளசெள !!

விலை மலிவாக இருந்தாலே மகத்துவம் யாருக்கும் தெரிவதில்லை, அதனால்தானோ என்னவோ மருத்துவ குணம் நிறைந்த செளசெள காயை பலரும் விரும்புவதே இல்லை.


·         செளசெளவில் கார்போஹைட்ரேட்,, புரதம், சுண்ணாம்பு, பாஸ்பரஸ், வைட்டமின் ,பி,சி,,கே போன்ற சத்துக்கள் நிரம்பியிருப்பதால் நரம்புகளுக்கு புத்துணர்வும் பலமும் அளிக்கிறது.

·         உயர் ரத்தஅழுத்தத்தைக் குறைத்து உடம்பை சமநிலையில் வைப்பதற்கு வாரம் இருமுறை இதனை எடுத்துக்கொண்டால் போதும்.  

·         சௌசௌவில் காணப்படும் காப்பர், மாங்கனீசு போன்றவை தைராய்டு நோயால் அவதிபடுபவர்களுக்கு சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.

·          வயிறு மற்றும் இடுப்புப் பகுதியில் சேர்ந்து இருக்கும் அதிகபடியான கொழுப்புகளை கரைக்க சௌசௌவை சூப் செய்து பருகினால் நல்ல பலன் கிடைக்கும்