ஆந்திராவில் என்னை விபச்சாரி ஆக்கிவிட்டார்கள்..! புகைப்படத்தை வெளியிட்டு சின்மயி சொன்ன தகவல்!

சமூக வலைதளத்தில் தனக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்கள் தன்னை விபச்சாரி என கூறுவதாக பிரபல பாடகி சின்மயி வேதனை தெரிவித்துள்ளார்.


பிரபல பாடகி சின்மயி, வைரமுத்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 2018 ஆண்டு புகார் கூறினார். சின்மயின் இந்த புகாருக்கு எதிர்ப்பும் ஆதரவும் எழுந்தது. வைரமுத்துவுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதை விமர்சித்திருந்தார் சின்மயி. ஆனால் டிவிட்டரில் சின்மயிக்கு ஆதரவாக சிலர் பேசினாலும் பெரும்பாலனோர் வைரமுத்துவுக்கு ஆதரவாகவே பேசி வருகின்றனர்.

சின்மயியை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்து வருவது தொடர் கதையாகி வருகிறது. சமூக வலைதளங்களில் அவரது சாதியை வைத்தும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் சமூக வலைதளங்களில் தன்னை இழிவான வார்த்தைகளால் விமர்சிப்பதாக வேதனை தெரிவித்துள்ளார்.

அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் கருத்து வேறுபாட்டின் ஒரு வடிவமாக துஷ்பிரயோகம் செய்வது என்பது ‘படிக்காதவர்கள்' செய்யும் ஒன்று என்று பலர் நம்புகிறார்கள்; ஏனென்றால் கல்வி ஒருவரின் நடத்தையை முற்றிலும் மாற்றுவது போல என பதிவிட்டுள்ளார்.

இதேபோல் மற்றொரு டிவிட்டில், நான் ஒரு விபச்சாரி என்று அழைக்கப்படுவது பழக்கமாகிவிட்டது; சமூக ஊடக தொடர்புகள் மற்றும் தனிப்பட்ட முறையில் வந்த பல இழிவான கருத்துகளும் ஆண்களிடமிருந்து வந்தவை. ‘எல்லா ஆண்களும் குப்பை' அல்லது ‘ஆண்கள் குப்பை' என்று நான் ஒருபோதும் கூறவில்லை. என பதிவிட்டுள்ளார்.

அவர்களில் ஒருவர் மருத்துவக் கல்லூரி மருத்துவர்; மற்ற அனைவரும் பட்டதாரிகள் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர்கள் அனைவரும் நான் துஷ்பிரயோகம் செய்ய தகுதியானவர் என்று நம்புகிறார்கள் என ஆதங்கம் தெரிவித்துள்ளார்.