சென்னை பட்டினப்பாக்கத்தை சேர்ந்த காவலரின் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவத்தில் சந்தேகம் இருப்பதாக பெண்ணின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் ஆர்.டி.ஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நானே ரெண்டாவதாம்..! மூனாவதா ஒரு பொம்பளய பிடிச்சிருக்காரு..! போலீஸ்காரரின் மனைவி எடுத்த பகீர் முடிவு!

சென்னை பட்டினப்பாக்கத்தை சேர்ந்தவர் அருள் இவர் பரங்கிமலையில் உள்ள காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி இவரது முதல் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.இந்நிலையில் தனக்கு திருமணமானதை மறைத்து அருள் ராஜேஸ்வரி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளதாக ராஜேஸ்வரியின் வீட்டார் புகார் அளித்துள்ளனர்.
இதையடுத்து கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக அருள் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அந்த உறவை கைவிடுமாறு ராஜேஸ்வரி கணவரை பலமுறை எச்சரித்துள்ளார். அவர் அதை பொருட்படுத்தாமல் இருந்துள்ளார். இதையடுத்து ராஜேஸ்வரியிடம் பணம் மற்றும் நகைகளை வீட்டில் இருந்து வாங்கி வரும்படியும் அடித்து கொடுமைப்படுத்திள்ளார்.
இதையடுத்து மனமுடைந்த ராஜேஸ்வரி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் தொலைபேசி வாயிலாக அருள் ராஜேஸ்வரி தற்கொலை செய்து கொண்டதை அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். ராஜேஸ்வரியின் பெற்றோர் அருள் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து ஆர்.டி.ஓ விசாரணைக்கு தற்போது உத்தரவிடப்பட்டுள்ளது.