உங்களுக்கு என்ன வேணும்..! நாங்க தர்றோம்..! மயக்கும் குரலில் ஆண்களை மயக்கிய இளம் பெண்கள்! மொத்தமாக சிக்கியதன் பின்னணி!

சென்னையில் கடன் வழங்குவதாகவும், வங்கியில் இருந்து பேசுவதாகவும் தெரிவித்து பொதுமக்கள் பணம் பல கோடி ரூபாயை சுருட்டிய கும்பல் போலீசாரிடம் பிடிபட்டுள்ளது.


சென்னை சிட்லபாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பீனிக்ஸ் கால் சென்டர் என்ற போலியான நிறுவனம் வாடகைக்கு செயல்பட்டு வந்தது. 

இந்த நிறுவனத்தில் உரிமையாளர்கள், பணியாளர்கள் என 12 பேர் பொதுமக்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்குவதாக ஆசை காட்டியுள்ளனர். வங்கிக்கு நேரடியாக சென்றால் கிடைக்கும் வட்டி தொகையை விட மிகக் குறைந்த வட்டியில் கடன் வழங்குவதாக மூளைச் சலவை செய்துள்ளனர்.

இதனை நம்பும் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் ஈமெயில் முகவரிக்கு கடன் வழங்குவதற்கான விண்ணப்பம் அனுப்பி வைப்பர். அதில் பொதுமக்களின் ஆதார் கார்டு எண், வங்கிக் கணக்கு விவரம் என அனைத்தும் இருக்கும். பின்னர் 2 நாட்கள் வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு வங்கிக் கடன் கிடைத்து விட்டதாகவும் அந்த கடனை பெற வாடிக்கையாளர் வங்கிக் கணக்கில் குறைந்த பட்சம் 50 ஆயிரம் இருக்கவேண்டும் என கூறியுள்ளனர். இதை நம்பிய வாடிக்கையாளர்கள் தங்களுடைய வங்கிக் கணக்கில் பணம் செலுத்தி உள்ளனர்.

இதன் பின்னர் வங்கி கடன் வரவு வைப்பதற்கு ஒரு ஓடிபி வரும் என்று கேட்கின்றனர். வாடிக்கையாளரும் அந்த ஓடிபி என்னை சொல்ல, உடனே அவர்கள் வங்கியில் டெபாசிட் செய்திருந்த தொகை அந்த போலி கால் சென்டரால் அபகரிக்கப்பட்டு விடுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் புகார் அளிக்க போலி கால்சென்டரை நடத்தி வந்தவர்கள் மற்றும் அதில் வேலை பார்த்தவர்கள் என 5 பெண்கள் உட்பட 12 பேரைக் கைது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் இதில் வேலை பார்த்த 5 பெண்கள் வேலை வாய்ப்பு விளம்பரத்தை பார்த்து தான் அந்த கால் சென்டரில் வேலைக்கு சேர்ந்ததாகவும் மோசடிக்கும் அவர்களுக்கும் தொடர்புஇல்லை எனவும் அவரது பெற்றோர் சென்னை மத்திய குற்றப்பிரிவு அலுவலகம் முன்பு திரண்டனர்.