மகளை கண் பரிசோதனைக்கு அழைத்துச் சென்ற தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி..! மூளையில் புற்று நோய் என அதிர வைத்த டாக்டர்கள்!

லண்டன்: கண் பார்வை பரிசோதனை செய்த 14 வயது சிறுமிக்கு மூளையில் கட்டி இருக்கும் உண்மை தெரியவந்தது.


பிரிட்டனில் உள்ள சவுத் குரோய்டான் பகுதியில் செயல்படும் Specsavers கிளினிக்கில், மில்லி கார்பட் என்ற 14 வயது சிறுமிக்கு, கடந்த 4 ஆண்டுகளாக, கடும் தலைவலி இருந்துள்ளது. இதன்பேரில், சிறுமியை அவரது தாய் கண் பார்வை பரிசோதனைக்கு அழைத்துச் சென்றார்.

அங்கே பரிசோதனை செய்தபோது, சிறுமியின் பார்வை நரம்பு வித்தியாசமான வகையில் சுருட்டிக்கொண்டு உள்ளதாகவும், அவருக்கு மூளையில் பெரிய கட்டி இருக்கலாம் எனவும் கண் பரிசோதனை செய்தவர் தெரிவித்தார்.  

இதையடுத்து, அந்த சிறுமியை மற்றொரு மருத்துவமனையில் அனுமதித்து, பரிசோதித்தனர். இதில், மூளையில் கடந்த 10 ஆண்டுகளாக மிகப்பெரிய கட்டி ஒன்று இருப்பதாக தெரியவந்தது. உடனடியாக, அதனை 10 மணிநேரம் போராடி, மிகப்பெரிய அறுவை சிகிச்சை செய்து, மருத்துவர்கள் தற்போது அகற்றியுள்ளனர்.