நடிகர் சந்தானத்தை விரட்டும் பிராமணர்கள்.! அவமானப்படுத்தியதாக குற்றம் சாட்டுவது உண்மையா..விளம்பரமா?

நடிகர் சந்தானம் நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் படம் ஏ1 எனப்படும் அக்யூஸ்ட் ஒன்.


இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் பிராமணர்களை குறிப்பாக பிராமண பெண்களை அவதூறாக சித்தரித்து  காட்சிகள் இடம் பெற்றிருந்தன.  ஆண் நண்பருக்காக பிராமண பெண், தங்களின் ஆச்சாரங்களை தூக்கி எறிவது போன்று காட்சி சித்தரிக்கப்பட்டிருந்தது. இது பிராமண குல மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி விட்டதாம். திட்டமிட்டு திணிக்கப்பட்ட காட்சியாக இருக்கிறதாம்.

அதனால் இதுகுறித்து சென்னை போலீஸ் கமிஷனிடம் புகார் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, நெல்லையிலும் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் அந்தணர் முன்னேற்ற கழகத்தின் சார்பில் அதன் கொள்கை பரப்பு செயலாளர் கார்த்திக் தலைமையில் அதன் நிர்வாகிகள் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு அளித்தனர்.

அவர்கள் கொடுத்திருக்கும் மனுவில், ‘சந்தானம் நடித்துள்ள ஏ1 படம், பிராமண பெண்களை கேலியாகவும், அவதூறாகவும் சித்தரிக்கிறது. பிராமண பெண்ணை மற்ற சமுதாயத்தினர் இழிவுப்படுத்துவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இதனால் எங்கள் மனம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே படத்தில் நடித்த சந்தானம், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

சந்தானத்தை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டுமாம். இது நிஜமான ஆக்ரோஷ குரலா அல்லது தொடர்ந்து தோல்விப் படங்களைக் கொடுத்துவரும் சந்தானத்துக்கு பூஸ்ட் கொடுக்கும் வகையில் மறைமுக விளம்பரம் செய்யும் முயற்சியா..?