அமெரிக்க உல்லாச படகில் பயங்கர தீ! இன்பச்சுற்றுலா சென்ற இந்திய கணவன் - மனைவிக்கு நேர்ந்த பயங்கரம்!

கலிபோர்னியா அருகே படகு தீப்பற்றி எரிந்ததில் இந்தியாவைச் சேர்ந்த இளம் தம்பதிகளும் இறந்திருக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.


கலிபோர்னியா அருகில் உள்ள சண்டகுலோஸ் தீவில் மூன்று நாட்கள் கடலில் நீச்சல் அடிக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து பயிற்சிக்கு ஏராளமானோர் விண்ணப்பித்திருந்தனர். அதன்படி ஒரு படகில் 5 ஊழியர்கள் 36 சுற்றுலா பயணிகள் என மொத்தம் 41 பேர் சண்டகுலோஸ் தீவிற்கு படகில் சென்று கொண்டிருந்தனர்.

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை அன்று படகில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது இதில் படகின் கீழ்தளத்தில் உள்ளூர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழக்க மேல்தளத்தில் இருந்த 5 ஊழியர்கள் மட்டும் கடலில் குதித்து மற்றொரு கப்பலில் தஞ்சம் புகுந்து உயிர் தப்பினர். இதில் இந்தியாவை சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் சதீஸ் என்பவரின் மகளும் பல் மருத்துவருமான சஞ்சீரி மற்றும் அவரது கணவரும் தீயில் கருகி உயிரிழந்திருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தீ விபத்து குறித்த முறையான தகவலை அமெரிக்க அரசாங்கம் இந்தியாவில் இருக்கும் இவரது குடும்பத்திற்கு அறிவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில், குழந்தைகள் நல மருத்துவரான சதீஷின் மற்றொரு மகள் அமெரிக்காவில் தங்கி இதற்கான விசாரணையை மேற்கொண்டு வருகிறார்.

மேலும் உடல் கருகி இறந்ததாக கூறப்படும் இரண்டு தம்பதிகளும் இரண்டு மாதங்களுக்கு முன் திருமணமாகி அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்ததாகவும் சாண்டாகுலாஸ் தீவில் நடக்க இருக்கும் ஆழ்கடல் பயிற்சியில் பங்கேற்க பதிவு செய்திருந்ததாகவும் கூறப்படுகிறது.