இந்த ஏப்ரல் மாதத்தில் வங்கிகளுக்கு 14 நாட்கள் விடுமுறை தேதியை பட்டியலிடுகிறது வங்கிகள்.
உஷார்... இந்த மாதம் 14 நாட்கள் வங்கி விடுமுறை..!

கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகத்தையும் ஆட்டிப் படைக்கிறது. தற்போது 11,00,283 பேர் கொரோனா வைரஸினால் உலகத்தில் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் சுமார் 58,929 பேர் மரணம் அடைந்திருக்கிறார்கள்.இதனால் கடன் கொடுத்த வங்கிகள் தங்கள் கடன் தவணைகளை திருப்பி வசூலிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். இந்த இக்கட்டான சூழலில் ஆர்பிஐ வேறு இஎம்ஐ தவணைகளை ஒத்திவைக்க வங்கிகளுக்கு அனுமதி அளித்துள்ளது. பல வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு மூன்று தவணைகளில் ஒத்திப் போட அனுமதி கொடுத்திருக்கிறார்கள்.
மத்திய அரசு கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்தியாவில் 21 நாட்களுக்கு ஷட் டவுண் அறிவித்துள்ளது. இதனால் வங்கிக் கிளைகள் குறைவான நேரத்துக்கு மட்டும் திறந்து வைக்கிறார்கள் இதனோடு குறைவான அளவிலான ஊழியர்கள் மட்டுமே அலுவலகத்தில் இருக்கிறார்கள். இதனால் வங்கி வாடிக்கையாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளார்கள்.
ஏப்ரல் மாதத்தில் வங்கிகளின் விடுமுறை நாட்கள் பின்வருமாறு.
01 ஏப்ரல் 2020 ஆண்டு வங்கி நிறைவு நாள்
02 ஏப்ரல் 2020 ராம நவமி
05 ஏப்ரல் 2020 ஞாயிற்றுக் கிழமை 06 ஏப்ரல் 2020 மகாவீர் ஜெயந்தி
10 ஏப்ரல் 2020 புனித வெள்ளி
11 ஏப்ரல் 2020 இரண்டாம் சனிக் கிழமை
12 ஏப்ரல் 2020 ஞாயிற்றுக் கிழமை 13 ஏப்ரல் 2020 பிஜு திருவிழா, போஹக் பிஹீ, செய்ரோபா (Cheiraoba), பைசாகி (Baisakhi)
14 ஏப்ரல் 2020 அம்பேத்கர் பிறந்த நாள், வங்காளி புத்தாண்டு, தமிழ் புத்தாண்டு, விசு, போஹக் பிஹூ
15 ஏப்ரல் 2020 ஹிமாச்சல் நாள், போஹக் பிஹூ
19 ஏப்ரல் 2020 ஞாயிற்றுக் கிழமை 20 ஏப்ரல் 2020 கரிய பூஜா
25 ஏப்ரல் 2020 நான்காம் சனிக் கிழமை, பரசுராமர் ஜெயந்தி
26 ஏப்ரல் 2020 ஞாயிற்றுக் கிழமை என ஆர்பிஐ வலைதளத்தில் பட்டியலிட்டுள்ளது.
இதில் எந்த தேதிகள் எல்லாம் தமிழகத்துக்கு விடுமுறையாக இருக்கும் என்பதையும் தெரிந்து கொள்வோம்.
01 ஏப்ரல் 2020 ஆண்டு வங்கி நிறைவு நாள்
06 ஏப்ரல் 2020 மகாவீர் ஜெயந்தி
10 ஏப்ரல் 2020 புனித வெள்ளி
11 ஏப்ரல் 2020 இரண்டாம் சனிக் கிழமை
14 ஏப்ரல் 2020 அம்பேத்கர் பிறந்த நாள், தமிழ் புத்தாண்டு
25 ஏப்ரல் 2020 நான்காம் சனிக் கிழமை
மேற்கூறிய தேதிகள் தமிழகத்தில் வங்கிகள் விடுமுறையாக அறிவித்துள்ளது ஆர்பிஐ வலைத்தளம்.
இந்த தேதிகளில் வங்கிக்குச் செல்லும் பணியை மாற்றிக் கொள்ளவும். பெரும்பாலும் ஆன்லைனிலேயே எல்லா வேலைகளையும் முடித்துக் கொள்ளவும். தமிழகம் இல்லாமல் மற்ற பகுதிகள் விடுமுறை என்றால், வெளி மாநிலங்களில் இருந்து வரும் அல்லது வெளி மாநிலங்ளுக்குச் செல்லும் காசோலைகள் (செக்) க்ளியர் ஆக நாள் எடுக்கலாம். எனவே இந்த விடுமுறை தேதியை மனதில் கொண்டு வங்கி வேலைகளை திட்டமிட்டு கொள்ளவும்.