குவாஹாட்டி: அசாம் மாநிலத்தில் நரபலி கொடுக்க முயன்ற பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குடும்பத்துடன் நிர்வாண பூஜை! மாணவன் நரபலி! ஆசிரியரின் அதிர வைக்கும் செயல்!

அசாம் மாநிலத்தின் உடல்குரி மாவட்டத்தில் உள்ள கலைகோன் பகுதியை சேர்ந்தவர் ஜாதவ் சஹாரியா. பில்லி சூனியத்தில் நம்பிக்கை வைத்துள்ள இவர், உள்ளூரை சேர்ந்த சிறுவன் ஒருவனை நரபலி கொடுக்க முடிவு செய்துள்ளார். இதற்கு, அந்த சிறுவனின் பெற்றோரும் உடந்தையாக இருந்துள்ளனர்.
இதன்பேரில், சில நாள் முன்பாக, தங்களது வீடு மற்றும் இருசக்கர வாகனத்தை தீயிட்டு கொளுத்திவிட்டு, நிர்வாண நடனமாடியுள்ளனர். அத்துடன், சிறுவனை நரபலி கொடுக்க முயன்றுள்ளனர். இதை தடுக்க முயன்ற பொதுமக்களை அவர்கள் பயங்கரமான ஆயுதங்களை கொண்டு தாக்கியுள்ளனர்.
இதுபற்றி உடனடியாக, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து, குறிப்பிட்ட நரபலி கோஷ்டியை கைது செய்ய முயற்சித்தனர். ஆனால், அந்த நபர்கள் போலீசார் மீதும் தாக்குதல் நடத்த முயன்றனர். வேறு வழியின்றி துப்பாக்கிச் சூடு நடத்தி, நிலைமையை போலீசார் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
பிறகு, சிறுவனை ரத்த காயங்களுடன் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். குறிப்பிட்ட நரபலி சாமியார் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரையும் கைது செய்தனர்.