தமிழ் திரை உலகில் புன்னகையரசி என்று செல்லவமாக அழைக்கபடும் சினேகா அவர்கள் 2020-வது ஆண்டின் மார்ச் 8 மகளிர் தினத்தையோட்டி ரசிகர்களுக்குகாக தனது பெண் குழந்தையின் புகைப்படத்தை சமூக வளைதங்களில் பதிவிட்டுள்ளார்.
முதல் முறையாக வெளியான நடிகை சினேகாவின் 2வது மகள் புகைப்படம்! எப்படி இருக்காங்க தெரியுமா?

தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. என்னவளே படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் ஆனாவர்தான் சினேகா. இவர் அஜித், விஜய்,கமல், சூரியா,தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இந்நிலையில், ‘அச்சமுண்டு அச்சமுண்டு படத்தின் படப்பிடிப்பின் போது சினேகாவும் பிரசன்னாவும் காதலித்தனர்.
பின்னர் இறுதியாக, அவர்கள் மே 11, 2012 அன்று திருமணம் செய்து கொண்டனர். தம்பதியருக்கு 5 வயது மகன் விஹான் உள்ளார். இதற்கிடையில் நடிகை சினேகா அவர்கள் ரியாலிட்டி ஷோ டான்ஸ் ஜோடி டான்ஸ் 3.0 இன் இணை நடுவராக பணியாற்றி வருகிறார். இதுமட்டுமின்றி டான்சிங் கில்லடிஸ் மற்றும் டான்ஸ் ஜோடி டான்ஸ் ஜூனியர்ஸ் ஆகியவற்றின் நடுவராக இருகிறார்.
எல்லோரும் நேற்று (மார்ச் 8) சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடினர். இந்நிலையில், நடிகை சினேகா பிரசன்னா தனது மகளுடன் அந்த நாளை கொண்டாடி உள்ளனர். அது என்னவென்றால் தங்களின் பெண் குழந்தையின் புகைப்படத்தை சமூக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
மேலும், அந்த பதிவியில் சினேகா, தனது வாழ்க்கையில் மிக முக்கியமான 3 பெண்களைக் குறிப்பிட்டு அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். சினேகா தனது பிறந்த பெண் குழந்தை ஆத்யந்தா, சகோதரி மற்றும் தாயை தனது வாழ்க்கையில் சிறப்பு பெண்களாக கருதுகிறார்.
இந்த மூன்று முக்கியமான பெண்களின் படங்களை பகிர்ந்து கொண்ட சினேகா, “என் வாழ்க்கையில் இந்த பெண்கள் இல்லாமல் நான் ஒன்றுமில்லை ! # தாய்மை # தாய் மகள் # சகோதரி ” என்று தனது பதிவியில் தெரிவித்துள்ளார்.