வடபழனி டூ மெல்பர்ன்! எங்கேயும் காயத்ரி! எப்போதும் காயத்ரி! சர்ச்சையில் விஜய்சேதுபதி!

அண்மைக்காலமாக விஜய்சேதுபதியுடன் பொது இடங்களில் நடிகை காயத்திரி அதிகம் தென்படுவது கோலிவுட்டில் வேறுவிதமாக கிசுகிசுக்கப்படுகிறது.


படங்களில் சைட் ஆக்டராக நடித்து வந்த விஜய் சேதுபதி தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் ஹீரோ ஆனார். அந்த படத்தில் பேசப்பட்டாலும் கூட அவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய படம் பீட்ஷா. அதன் பிறகு அனைவரும் அறிந்து கொள்ளும் நடிகராக விஜய் சேதுபதியை அடையாளப்படுத்தியது நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்.

இந்த படத்திற்கு பிறகு தான் விஜய் சேதுபதி பிரபல ஹீரோ ஆனார். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்தவர் காயத்ரி.  இதன் பிறகு அவ்வப்போது தனது படத்தில் காயத்ரிக்கு தவறாமல் வாய்ப்பு கொடுத்து வந்தார் விஜய் சேதுபதி.

ரம்மி, புரியாத புதிர் ஆகிய படங்களிலும் காயத்ரிக்கு முக்கிய வேடங்கள் கிடைத்தது. இதற்கு படத்தின் நாயகன் விஜய்சேதுபதி தான் காரணம். தொடர்ந்து ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், சீதக்காதி, சூப்பர் டீலக்ஸ் என விஜய் சேதுபதி படங்களில் தவறாமல் காயத்ரிக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு வந்தது.

இதோடு அல்லாமல் மாமனிதன் படத்திலும் விஜய்சேதுபதியுடன் காயத்ரி இணைந்துள்ளார். இப்படி சுமார் ஏழு படங்களில் விஜய்சேதுபதியுடன் காயத்ரி இணைந்து நடித்துவிட்டார். வேறு எந்த நடிகையும் விஜய்சேதுபதியுடன் இத்தனை படங்களில் இணைந்து நடிக்கவில்லை.

இதற்கிடையே திரைப்பட நட்பையும் தாண்டி தனிப்பட்ட முறையிலும் காயத்ரி – விஜய்சேதுபதி நட்பு தொடர்கிறது. தற்போது நட்பு எல்லை தாண்டி மெல்பர்ன் வரை சென்றுள்ளது தான் சர்ச்சையாகியுள்ளது. கடந்த வாரம் சென்னை வடபழனியில் துக்ளக் தர்பார் படவிழா நடைபெற்றது.

இந்த படத்தில் காயத்ரி நடிக்கிறாரா? இல்லையா? என்று தெளிவுபடுத்தப்படவில்லை. ஆனால் படு கவர்ச்சியான உடையில் விழாவிற்கு வந்த அவர் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். காரணம் விஜய் சேதுபதி அருகே காயத்ரிக்கு இடம் வழங்கப்பட்டது.

இதே போல் மெல்பர்னில் நடைபெற்று வரும் மெல்பர்ன் படவிழாவிலும் விஜய் சேதுபதி – காயத்ரி ஜோடி ஒன்றாக கலந்து கொண்டது. சூப்பர் டீலக்ஸ் படம் அங்கு திரையிடப்பட்டதால் இரண்டு பேரும் ஜோடியாக சென்றதாக அவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

ஆனால் நட்பு வடபழனியில் இருந்து மெல்பர்ன் வரை செல்லும் அளவிற்கு வளர்ந்துள்ளதாகவும் இதை எல்லை மீறிய நட்பாகிவிடக்கூடாது என்று விஜய்சேதுபதி நலம் விரும்பிகள் பேச ஆரம்பித்துள்ளனர்.