ஒரு காலத்தில்,எல்லா சிவாஜி படங்களிலும் தவராமல் இடம் பெறுவார் மறைந்த ஜெய்கணேஷ். அப்போது அவரும் பிஸியான நடிகர்.
சிவாஜியின் லொள்ளு கதைகள்..! வைகோ பேசுனதைப் பார்த்து சிவாஜி என்ன சொன்னாருன்னு தெரியுமா?

ஒரு நாள் சிவாஜியுடன் அவர் நடித்த படம் ஒன்றின் படப்பிடிப்புக்கு ஜெய்கணேஷ் சற்றுத் தாமதமாக வந்திருக்கிறார்.டயரக்ட்டரைப் பார்த்து வணக்கம் வைத்துவர் நேராக சிவாஜியிடம் வந்திருக்கிறார். குனிந்து வணங்கி,தான் தேவர் ஃபிலிம்ஸ் படம் ஒன்றில் நடிப்பதாகவும்,அங்கே சற்று தாமதமாகிவிட்டதாகவும் சொல்ல
சிவாஜி: என்ன படம்ப்பா?!
ஜெய்கணேஷ்: ஆட்டுக்கார அலமேலுணே!
சிவாஜி: அலமேலு யாரு?
ஜெய்கணேஷ்: அண்ணே,ஸ்ரீப்ரியாணே!
சிவாஜி: நீதான் ஆடா?.
* * *
சின்ன்ப பசங்க நாங்க படத்தின் போது பிரபு கவுண்டமணியை தங்கள் வீட்டுக்கு அழைத்துப் போனாராம்.
அன்று படப்பிடிப்பு இல்லாததால் சிவாஜி வீட்டில் இருந்திருக்கிறார்.கவுண்டமணியை சிவாஜியிடம் அழைத்துப்போய்,' அப்பா மணியண்ணன்' என்று அறிமுகம் செய்துவிட்டு உடை மாற்ற வீட்டுக்குள் சென்றுவிட்டார்.
சிவாஜி: தம்பி என்ன தொழில் பண்றீங்க?
கவுண்டமணி: அண்ணே நான் சினிமால நடிக்கரண்ணே!
சிவாஜி: ஓ நடிக்கரா..?
கவுண்டமணி: தம்பி நடிக்கிற படத்துல கூட நடிக்கறனுங்க
சிவாஜி: ஓ...தம்பியும் நடிகரா!
* * *
சிவாஜி அரசியலில் இறங்கி தமிழ்நாடு முன்னேற்ற முன்னணி ஆரம்பித்த புதிது.கட்சிக்காரர்களுடன் வீட்டில் அமர்ந்து டி.வி பார்த்துக்கொண்டு இருந்திருக்கிறார்.அந்தத் தொலைக்காட்சியில் வைகோ பேசிய உரை ஒன்றைக் ஒளிபரப்பி இருக்கிறார்கள் அதை கண்கள் விரிய பார்த்துக்கொண்டு இருந்த சிவாஜி சொன்னாராம் ' இந்த ஆள் மட்டும் நடிக்க வந்திருந்தா எங்களை எல்லாம் எப்பவோ வூட்டுக்கு அனுப்பி இருப்பாம்ப்பா,என்ன தமிழ்,என்ன குரல்,என்ன நடிப்பு! என்றாராம்.
தான் , மற்றவர்களை கலாய்ப்பது போலவே தன்னை யாராவது கலாய்த்தாலும் அதையும் வெடிச்சிரிப்புடன் கேட்டு ரசித்திருக்கிறார் சிவாஜி.
தேவர் மகன் படத்தின் ப்ரீவியூ,படம் முடிந்து எல்லோருன் சிவாஜி,கமல் இருவரையும் பாராட்டிக் கொண்டே இருக்க ,தூரத்தில் நைசாக எஸ்கேப் ஆகும் கவுண்டமணியை பார்த்து விட்டார்.அவரை அழைத்து ' என்ன மணி ஒன்னும் சொல்லாமப் போற' என்று சிவாஜி கேட்க,' அண்ணா,சூப்பர் படம்னா' என்றாராம் கவுண்டமணி.
அதெல்லாம் எங்களுக்குத் தெரியும் 'உன் கருத்து என்னப்பா' என்று கேட்க,சற்று தயங்கிய கவுண்டமணி ' இல்லீங்ணா,படம் பூரா தேவர் ,அப்பிடி இப்பிடினு சொல்லீட்டு,கடைசீல கொழந்தப் புள்ளைங்க மிதிச்சு செத்துப் போயிட்டீங்களேண்ணா' என்று சொல்ல ,அதை கேட்ட சிவாஜி ரசித்து சிரித்தாராம்.
சிவாஜி பற்றி சொல்லப்படும் பெரிய குற்றச்சாட்டு அவர் கஞ்சர் என்பதுதான்,இந்தக் கதையை கேளுங்கள்.
அறுபதுகளின் இறுதியில் பால் தாக்கரே தமிழ் படங்களை மும்பையில் திரையிட எதிர்ப்பு தெரிவித்து தென்னிந்திய திரைப்படங்கள் ஓடிய தியேட்டர்களை அவரது தொண்டர்கள் தாக்கிக் கொண்டு இருந்த காலம்.அப்போது சிவாஜி நடித்த ஒரு படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடந்து கொண்டு இருந்திருக்கிறது.
அதை தடுக்க வேண்டும் என்று சொன்ன சிவசேனா தொண்டர்களுக்கு , பால் தாக்கரே சொன்ன பதில் இதுதான் ' சிவாஜி பார்க்கில் இருக்கும் மராட்டிய சிவாஜி சிலை செய்ய பெரிய நிதி உதவி அளித்தவர் சிவாஜி கனேசன்.அவரால்தான் தென்னிந்தியாவில் சிவாஜியின் புகழ் பரவியது.
அவரது சினிமாவின் படப்பிடிப்பிற்கு எந்த இடையூறும் செய்யக் கூடாது' என்றாராம்.அமெரிக்க அரசால் அதிகார பூர்வமாக அழைக்கப்பட்டு கவுரவ படுத்தப் பட்ட ஒரே இந்திய நடிகர் சிவாஜி கணேசன்!.