திருப்பரங்குன்றத்தில் கமல் மீது வீசப்பட்ட செருப்பு எங்கே? உண்மை பின்னணி!

கமல்ஹாசனின் இந்து தீவிரவாதி விவகாரத்தை ஒரு வழியாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சுமூகமாக முடித்து வைத்துவிட்டார். அதன்பிறகுதான் சண்டியர் கமல் தைரியமாக தேர்தல் பிரசாரத்துக்கு வலம் வந்தார்.


இந்த நிலையில்  திருப்பரங்குன்றத்தில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்ட மேடையிலிருந்த கமல் மீது செருப்பு வீசப்பட்டதாக செய்தி வெளியானது. ஆனால், அப்படியொரு நிகழ்வு நடக்கவே இல்லை என்று உறுதியுடன் சொல்கிறார்கள் ம.நீ.ம. நிர்வாகிகள்.

பிறகு எதற்காக கம்ல்ஹாசன் மீது செருப்பு வீசப்பட்டதாகவும், அப்படி செருப்பு வீசிய நபரை போலீஸ் பிடித்து போலீஸிடம் ஒப்படைத்த்தாகவும் தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து கட்சியினரிடம் பேசினோம்.

‘’நான் மதுரை ம.நீ.ம. முக்கியப் பொறுப்பில் இருக்கேங்க. இன்னைக்கு எங்க தலைவர் காரசாரமா பேசுவாருன்னு எதிர்பார்த்து காத்திருந்தோம். கருப்புக்கொடி காட்டப்போறாங்க, கல் எடுத்து வீசப் போறாங்கன்னு நாங்களும் ஆட்களோட தயாரா இருந்தோம். ஆனா, மொத்தமே நாலைஞ்சு ஒரு கிலோ மீட்டர் தூரத்துல தள்ளி நின்னு பாரத மாதா கீ ஜேன்னு குரல் குடுத்துட்டு நின்னாங்க.

அவங்க அப்படியே நடந்து கமல்ஹாசனை பார்க்க வந்தாங்க. அவங்களைத்தான் போலீஸ் வளைச்சுப் பிடிச்சது. பாவம், அவங்க காசு கொடுத்து கூட்டி வந்தவங்க போலத்தான் இருந்தாங்க.

அவங்களை போலீஸ் பிடிச்சுட்டுப் போனதுக்குப் பிறகு எந்த அசம்பாவிதமும் நடக்கல. எங்க தலைவரு கோட்சேவை தீவிரவாதி என்று கூறியது சரித்திர உண்மைன்னு சொன்னார். அதுக்குப் பிறகு வில்லாபுரத்தில்  பொதுக்கூட்ட மேடையில் பிரச்சாரம் நடந்திச்சு. .நான் அங்கேதான் தலைவர்கிட்டே நின்னேன். திடீர்னு செருப்பு வீசிட்டாங்கன்னு சொன்னாங்க.

ஆனா, அப்படி யாரும் செருப்பு வீசவே இல்லை, தலைவர் சாதாரணமா பேசிட்டுப் போயிட்டார். யாருமே செருப்பு வீசாதப்ப, எதுக்கு வீசுனாங்கன்னு பொய் சொல்றாங்க, எதுக்கு இப்ப கோட்சேவை பேசுறாரு, ஒண்ணுமே புரியலை என்று சொல்கிறார். என்னப்பா... எங்கேப்பா அந்த செருப்பு, அதையாவது காட்டுங்கப்பா...