டிக்டாக் செயலி மூலம் ஒரு தலையாக காதலித்து வந்த நபரை காண்பதற்கு பெண்ணொருவர் தஞ்சையிலிருந்து மதுரை சென்ற சம்பவமானது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை டூ மதுரை..! 200 கிலோ மீட்டர்..! டிக் டாக் காதலனை சந்திக்க நடந்தே சென்ற இளம் பெண்..! ஆனால் அங்கு அவருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த பிஎஸ்சி பட்டதாரி பெண் ஒருவர் சமீபகாலமாக டிக் டாக் செயலியில் அதிகமாக ஈடுபட்டு வந்தார். இவருக்கு மதுரை மாவட்டத்திலுள்ள ஆரப்பாளையத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் அதே செயலியில் நெருக்கம் ஏற்பட்டுள்ளது.
நெருக்கமானது நாளடைவில் ஒருதலை காதலாக மாறியுள்ளது. அந்த பெண் சம்மந்தப்பட்ட இளைஞரே ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். இதை அறிந்த சம்பந்தப்பட்ட வாலிபர் அந்த பெண்ணுடனான தொடர்பை கைவிடுவதற்கு முயன்றுள்ளார். ஆனாலும் பாதிக்கப்பட்ட பெண், தன்னுடைய காதலில் மிகவும் தீவிரமாக இருந்து வந்துள்ளார்.
தற்போது தமிழ்நாடு முழுவதிலும் ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தினால் அந்த பெண் தஞ்சையில் இருந்து மதுரைக்கு பைபாஸ் சாலை மூலம் நடந்து வருவதாக கூறியுள்ளார். தஞ்சையில் இருந்து மதுரைக்கு 200 கிலோமீட்டருள்ள நிலையில் நடந்து வரும் வழி தோறும் காதல் பாடல்களை பாடி, வரும் இடங்களின் பெயர்களை கூறி வீடியோ எடுத்து வந்துள்ளார்.
நேற்று மாலை மதுரை மாவட்டத்திலுள்ள மேலூர் பகுதியில் அவர் நடந்துகொண்டிருந்தபோது வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை பார்த்த பலரும் சமூக வலைதளங்களில் அந்த பெண்ணுக்கு அறிவுரை கூறும்படி காவல்துறையினருக்கு கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவமானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.