வளைவில் அதிவேகம்! அரசுப் பேருந்துக்குள் இருந்து தூக்கி வீசப்பட்ட இளம்பெண்! பதற வைக்கும் சிசிடிவி காட்சி!

பேருந்தில் புட்போர்டில் பயணம் செய்த பெண் வெளியே தூக்கி அடிக்கப்பட்ட காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


னநாமக்கல் மாவட்டத்தில் குமாரபாளையம் எனும் இடம் அமைந்துள்ளது. இதற்கடுத்துள்ள அன்னை சத்யா நகரில் கோகிலா என்பவர் வசித்துவந்தார். நாமக்கல்லில் இருந்து ஈரோடு செல்வதற்காக அரசு பேருந்தில் ஏறியுள்ளார். பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் இருக்கை கிடைக்காமல் படிக்கட்டில் நின்றபடி பயணம் செய்து வந்துள்ளார்.

வழக்கமாக செல்லும் கோட்டைமேடு பகுதியில் மேம்பால பணிகள் நடைபெற்று வந்ததால், சர்வீஸ் சாலையில் பேருந்து செல்ல முயன்றது. அப்போது சர்வீஸ் சாலை வளைவில் பேருந்து அதிவேகமாக திரும்பியது. பேருந்தின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாத கோகிலா பேருந்திலிருந்து தூக்கி வீசப்பட்டார்.

பின்னர் தார் சாலையில் இழுத்து செல்லப்பட்ட அவர், சாலையோரத்திலிருந்த சாக்கடையில் விழுந்துள்ளார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். சர்வீஸ் சாலையில் வாகனங்கள் வேகமாக செல்வதால் விபத்துக்கள் அதிகமாக ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் வேக தடுப்புகளை அமைத்து மாறு பொதுமக்கள் அரசாங்கத்தினரை வற்புறுத்தி வருகின்றனர்.

இந்த சம்பவமானது நாமக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.