ஒரே நேரத்தில் மூன்று பாட்டில் பீர்! இளம் பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாப சம்பவம்!

இணையதளத்தின் வாயிலாக பீர் ஆர்டர் செய்து குடித்ததால் இளம்பெண் 87,000 ரூபாய் இழந்துள்ள சம்பவமானது மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மும்பை மாநகரத்திற்கு அருகே பொவாய் எண்ணுமிடம் அமைந்துள்ளது. இப்பகுதியில் ராதா பரேக் என்ற பெண் வசித்து வருகிறார். இவர் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். சில நாட்களுக்கு முன்னர் விடுமுறையில் இருந்ததால் 3 பீர் பாட்டில்களை ஆர்டர் செய்துள்ளார்.

பணத்தை முன்கூட்டியே செலுத்தினால் மட்டுமே பீர் அனுப்பப்படும் என்று அந்த கடையின் உரிமையாளர் கூறியுள்ளார். யுபிஐ மூலம் அந்த பணத்தை எடுத்துக்கொள்வதாக கடைக்காரர்கள் கூறியுள்ளனர். இதனை நம்பினார் ராதிகா. அடுத்த சில வினாடிகளிலேயே அவருடைய அக்கவுன்டிலிருந்து 29,001 ரூபாய் எடுக்கப்பட்டிருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ராதிகா அதே நம்பருக்கு அழைத்துப் பேசிய போது, பணத்தை தவறுதலாக எடுத்து கொண்டதாக கூறியுள்ளனர். மேலும் அந்தப் பணத்தை திருப்பி செலுத்துவதாக கூறியுள்ளனர்.

இதனையும் நம்பியிருந்த ராதிகாவின் அக்கவுண்டிலிருந்து மீண்டும் 59,000 ரூபாய் எடுக்கப்பட்டது. அதே நம்பருக்கு அழைத்தபோது அந்த நம்பர் செயல்படவில்லை. அந்த முகவரியை தேடி பார்த்தபோது அப்படி ஒரு கடை அங்கு இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது சம்பந்தமாக அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவமானது மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.