ஆலமரத்தில் தூக்கில் கட்டி தொங்கவிடப்பட்ட இளம் பெண்..! ஆண் நண்பனுடன் சென்றவர் சடலமாக தொங்கிய பயங்கரம்! அதிர்ச்சி காரணம்!

19 வயது இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து ஆலமரத்தில் தூக்கிலிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டிருப்பது குஜராத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


குஜராத் மாநிலத்தில் ஆரவல்லி என்ற கிராமத்தில் 19 வயது இளம்பெண் டிசம்பர் மாதம் 31-ஆம் தேதியன்று தன்னுடைய சகோதரி உடன் வெளியே சென்றுள்ளார். இதனிடையே நெடுநேரமாகியும் சகோதரிகள் வீடு திரும்பாததால் பெற்றோர் பேரதிர்ச்சி அடைந்தனர். அதன் பின்னர் சகோதரிகளில் ஒருவர் மட்டும் வீடு திரும்பியுள்ளார். மற்றொரு மகளை பெற்றோர் தேடியும் கிடைக்கவில்லை. 1-ஆம் தேதியன்று காவல்துறையினரிடம் புகார் அளித்தனர்.

உடனடியாக காவல்துறையினர் புகாரை பதிவு செய்யாமல், காணாமல் போன பெண்ணின் சகோதரியுடன் விசாரணை நடத்தினர். அப்போது அந்த பெண்ணின் சகோதரி தன் சகோதரியை பிமல் பார்வாட் என்பவர் காரில் தூக்கி சென்றுவிட்டதாக கூறியுள்ளார். மேலும், இதுகுறித்து யாரிடமும் தெரிவிக்க கூடாது என்று வற்புறுத்தியதாகவும் கூறியுள்ளார்.

காவல்துறையினர் பின்னர் சம்பந்தப்பட்ட பெண்களின் பெற்றோரிடம், காணாமல் போன பெண்ணுக்கும் இன்னொருவருக்கும் தொடர்பு இருப்பதாகவும், அவர்கள் திருமணம் செய்து கொண்டு வீட்டிற்கு வருவார்கள் என்றும் கூறியுள்ளனர்.

ஆனால் 5-ஆம் தேதியன்று அதே கிராமத்தில் உள்ள ஆலமரத்தில் காணாமல் போன பெண் தூக்கில் தொங்கியபடி கிடந்துள்ளார். உடனடியாக காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் அந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.

உடனடியாக காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது, சம்பந்தப்பட்ட பெண்னை பிமல் பர்வாட் மற்றும் அவரது நண்பர்களான சதீஷ் பார்வார்ட், ஜிகர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தொடர்ந்து காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதனிடையே பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பெண்ணின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது குஜராத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.