சந்திராயன்-2 விண்கலம் கடைசி நேரத்தில் விழுந்த சம்பவமானது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று இஸ்ரேலுக்கு நடந்தது, இன்று இந்தியாவுக்கும் நடந்தது! சந்திரன் ஆய்வு சோதனைகள்!

ஜுலை மாதத்தில் சந்திராயன்-2 விண்கலம் நிலவில் சோதனை செய்ய அனுப்பப்பட்டது. நிலவின் தென்துருவத்திற்கு செல்வதற்காக விக்ரம் லேண்டர் விண்கலம் அனுப்பப்பட்டது. நேற்று கவுண்டவுன் தொடங்கிய நிலையில் காலை திடீரென்று ஏற்பட்ட கோளாறால் கீழே விழுந்து நொறுங்கியது.
இதேபோன்று இஸ்ரரேலில் பெயர்ஷீட் என்ற விண்கலத்தை அனுப்பியது. அதுவும் நன்றாகவே நிலவிற்கு சென்றது. ஏப்ரல் மாதத்தில் இந்த முயற்சியை நிறுவியது. ஆனால் நிலவில் தரையிரங்கும் போது அதிவேகமாக இறங்கியதால் உடைந்து நொறுங்கியது.
நிலவில் கரடுமுரடான பாதைகள் இருக்கும். இதனால் விண்கலண்கள் சிறிது கீழே விழுந்தாலும் நொறுங்கி விடுகின்றன. இதனால் தான் பெயர்ஷீட் விண்கலம் உடைந்தது.
சந்திராயன்-2 விண்கலம் பழுதானவுடன் இஸ்ரோ தலைவர் சிவன் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானார். பிரதமர் மோடி அவரை கட்டித்தழுவி ஆறுதல் படுத்தினார்.
இவ்வளவு பெரிய முயற்சி எடுதத்தே நம் நாட்டின் விஞ்ஞானிகளுக்கு பெருமையே. அவர்களை போற்றுவோம்!! புகழ்வோம்!!!