ஐ.நா. அதிகாரி ஒருவர் உத்தியோகபூர்வ வாகனத்திற்குள் ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்ளும் வீடியோ சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
முன்னாடி டிரைவர்! பின்னாடி இளம்பெண்ணுடன் செக்**ஸ்..! நடுரோட்டில் ஐநா அதிகாரி காருக்குள் செய்த தகாத செயல்! எங்கு தெரியுமா?

ஐநா அதிகாரி ஒருவர், உத்தியோகபூர்வ வாகனத்திற்குள் பெண் ஒருவருடன் உடலுறவு வைத்துக் கொள்ளும் வீடியோ பதிவு தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இஸ்ரேலின் டெல் அவிவ் நகரைச் சேர்ந்த இடத்தில் இந்த சம்பவமானது நிகழ்ந்திருக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வந்ததை அடுத்து, ஐக்கிய நாடுகள் சபை பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான ஒரு வழக்கு விசாரணையை துவங்கியுள்ளது. டெல் அவிவில் ஒரு பரபரப்பான சாலையோரத்தில் அமைந்துள்ள ஒரு கட்டுமானத்திலிருந்து இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
ஐ.நா. வாகனத்தின் பின்புற இருக்கையில் ஒரு நபருடன் சிவப்பு நிற உடை அணிந்து கொண்டு பெண் ஒருவர் அமர்ந்திருக்கிறார். காரின் முன்பகுதியில் உள்ள சீட்டில் டிரைவர் அமர்ந்திருக்கும் விதமாகவும் அந்த வீடியோ காட்சி அளிக்கிறது. இந்த வாகனம் ஐக்கிய நாடுகளின் சமாதான மேற்பார்வை அமைப்புக்கு (UNTSO) சொந்தமானது என்று கூறப்படுகிறது. பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டலுக்கு எதிராக ஐ.நா.வில் கடுமையான பாதுகாப்பு சட்டம் இருக்கும் இந்நிலையில் இம்மாதிரியான சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து பேசிய ஐ.நா. செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக், டெல் அவிவ் நகரில் உள்ள ஹயர்கான் சாலையில் எடுக்கப்பட்ட இந்த வீடியோ ஐ.நா.வை "அதிர்ச்சியடையச் செய்துள்ளது
இதில் காணப்படுகின்ற நடத்தை முற்றிலுமாக வெறுக்கத்தக்கது,
தவறான நடத்தை, மோசடி மற்றும் ஊழல் தொடர்பான பிரச்சினைகள் குறித்து மேற்பார்வையின் பணியிடத்தால் விசாரணை மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் வீடியோவில் உள்ளவர்கள் விரைவாக அடையாளம் காணப்படுவார்கள். கடந்த இரண்டு நாட்களில் விசாரணை தொடங்கப்பட்டதாகவும், இந்த பிரச்சனை மிக விரைவாக முடிவுக்கு வரும் என்றும் அவர் கூறினார். ஐநா அதிகாரியின் செயல் அடங்கிய இந்த வீடியோ பதிவு தற்போது சமூக வளைதளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.