தன் மீதான புகாரை திரும்ப பெறுமாறு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி தாக்கியதில் சிறுமியின் தாய் பரிதாபமாக உயிரிழந்தார்.
என் பொன்ன ஏன்டா அப்படி பண்ணுனீங்க..! தட்டிக் கேட்ட தாயை வெட்டி கூறு போட்ட கும்பல்! நெஞ்சை பதை பதைக்க வைக்கும் சம்பவம்!

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் பள்ளியில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த 13 வயது சிறுமியை 4 பேர் கொண்ட கும்பல் கடத்தி காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றது. அங்கு 4 கயவர்களும் அந்த சிறுமியை மாறி மாறி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தது. தனக்கு நேர்ந்த கொடுமையை தாயிடம் சொல்லி அழுதாள் அந்த சிறுமி.
இதனால் வேதனையும், ஆத்திரமும் அடைந்த சிறுமியின் தாய் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையிலும், மருத்துவ பரிசோதனை அடிப்படையிலும் 4 குற்றவாளிகளையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனால் இதுபோன்ற குற்றவாளிகளை எளிதில் தப்பிக்க விடுவதற்கே வந்த வழக்கறிஞர்கள் 4 பேருக்கும் ஜாமின் வாங்கி தந்துள்ளனர்.
இதை அடுத்து ஜாலியாக வெளியில் வந்த 4 பேரில் ஒருவன் நேராக சிறுமியின் வீட்டிற்கு சென்று தன் மீதான புகாரை வாபஸ் பெறுமாறு மிரட்டி உள்ளான். ஆனால் தாய் மறுத்துவிடவே சிறுமியின் தாய் மற்றும் தடுக்க வந்த மற்றொரு பெண்ணை கெடூரமாக தாக்கினான். இதில் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தாய் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுதொடர்பாக 5 பேரை போலீஸார் கைது செய்துள்ள நிலையில், சிறுமியின் தாயார் தாக்கப்படும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. தாயும் உயிரிழந்த நிலையில் அந்த கயவர்களால் மீண்டும் தனக்கு பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சத்தில் உள்ளார் 13 வயது சிறுமி. கடவுள், காவல்துறை இதில் எது அந்த சிறுமியை காப்பாற்றப்போகிறதோ?