இலங்கை தலைநகர் கொழும்புவில் வான்பரப்பில் மர்ம உயிரினம் ஒன்று பறந்துவரும் செய்தியானது நகர மக்களை பீதியில் உறைய வைத்துள்ளது.
இரவு நேரத்தில் வானில் வலம் வரும் விசித்திர உயிரினம்..! உறுதி செய்த வானியல் பேராசிரியர்! வீடியோவும் சிக்கியது!

இலங்கை நாட்டின் தலைநகரான கொழும்புவில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மர்ம உயிரினம் ஒன்று வான்பரப்பில் பறந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அந்நாட்டின் கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் பேராசிரியர்கள் ஆய்வு நடத்தினர்.
வானியல் பேராசிரியரான சந்தன ஜெயர்தன என்பவர் கூறுகையில், "அடையாளம் தெரியாத உயிரினம் ஒன்றே வானில் பறந்து வருகிறது. தொடர்ந்து அந்த உயிரினம் குறித்து தீவிர ஆய்வில் ஈடுபட்டு வருகிறோம்" என்றார். இந்த உயிரினம் குறித்த காணொளி ஒன்றும் கிடைக்க பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அதன் மூலமாகவும் குறிப்பிட்ட உயிரினத்தை பற்றி எந்தவித தகவல்களும் சேகரிக்க இயலவில்லை என்று கூறப்படுகிறது.
கொழும்பு மட்டுமின்றி ஹம்பன்டோட்டா, திருக்கோணமலை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் இந்த மர்ம உயிரினம் தென்படுவதாக கூறப்படுகிறது. இந்த சம்பவமானது இலங்கை நாட்டு மக்களிடையே சற்று பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.