திடீரென மயங்கிய பெண் எம்பி! ஹாஸ்பிடலில் ஐசியுவில் அட்மிட்! அதிர்ச்சி காரணம்!

திரிணாமுல் எம்.பி. நுஸ்ரத் ஜஹான் சுவாசக் கோளாறு காரணமாக கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்


திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பாக பசிர்ஹாட்டில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நுஸ்ரத் ஜஹான் ஞாயிற்றுக்கிழமை இரவு 9.30 மணியளவில் திடீரென ஏற்பட்ட சுவாசக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டுள்ள நுஸ்ரத் ஜஹான் மருத்துவமனையில் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஐசியூவில் இருந்தாலும் நலமுடனும் நினைவுடனும் இருப்பதாக அவரது பெற்றோர் கூறினர்.

தொண்டர்கள் இவர் விரைவில் குணமாகி வரவேண்டுமென்று பிரார்த்தனை செய்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.