கனிமொழியால் கட்சி மாறுகிறார் திருச்சி சிவா..!

கனிமொழியுடன் டெல்லியில் ஏற்பட்ட லடாய் காரணமாக திருச்சி சிவா தி.மு.க.வில் இருந்து வெளியேறி வேறு கட்சியில் தஞ்சமடையும் எண்ணத்தில் இருக்கிறாராம்.


   நான் தி.மு..வுக்காக எத்தனை பாடுபட்டிருப்பேன். என்னைப் போய் அவமானப்படுத்திட்டாரே என்று ஸ்டாலின் மீது கொலைவெறி கடுப்பில் இருக்கிறார் சிவா எம்.பி. டெல்லியில் தி.மு..வின் முகமாக அறியப்பட்டவர். தயாநிதி மாறன், அழகிரி, கனிமொழி என்று கருணாநிதி குடும்பத்தினர் டெல்லியில் ஆதிக்கம் செலுத்தினாலும் தன்னுடைய ரூட்டில் பயணித்துக்கொண்டு இருந்தவர் சிவா.

தி.மு..வையும் சிவாவையும் பிரிக்கமுடியாது என்றுதான் இத்தனை நாட்களும் சொல்லிக்கொண்டு இருந்தார்கள். ஆனால், ஒரே ஒரு சின்ன விவகாரத்தில் உரசல் ஏற்பட, இப்போது தி.மு..வை தலைமுழுகும் எண்ணத்திற்கு வந்துவிட்டார் என்று சொல்கிறார்கள். இதற்கு காரணம் கனிமொழி என்பதுதான் ஆச்சர்யமான உண்மை.


   நாடாளுமன்றத்தில் கஜா புயல் விவகாரமாக பேசுவதற்கு சிறப்புத்தீர்மானம் கொண்டுவருவதற்காக மாநிலங்களவை தலைவரிடம் கனிமொழி ஒரு கடிதம் கொடுத்திருக்கிறார். அதைக் கண்டதும், ‘‘உங்க கட்சியில் இருந்து ஏற்கெனவே சிவா குடுத்துட்டாரே... நீங்களும் பேசப் போறீங்களா? ஒரு ஆளுக்குத்தான் அனுமதி தரமுடியும்’’ என்று சொல்லியிருக்கிறார்.

உடனே கொந்தளித்த கனிமொழி நேரடியாக சிவாவிடம் போய் கேள்வி எழுபியிருக்கிறார். ‘‘நீங்கள் சிறப்புத் தீர்மானம் கொண்டுவருவதை என்னிடம் ஏன் சொல்லவில்லை என்று கேட்டாராம்..?’’ இதை எதற்காக உங்களிடம் சொல்ல வேண்டும் என்று கேட்டிருக்கிறார். நான்தானே நாடாளுமன்ற நிலைக்குழு தலைவர் என்று கனிமொழி சொல்லியிருக்கிறார். அதற்கும் அவர், எல்லாவற்றுக்கும் உங்களிடம் அனுமதி வாங்கமுடியாது... நான்தான் இங்கே சீனியர் என்று சொல்லிவிட்டாராம்.


   உடனடியாக அண்ணன் ஸ்டாலினுக்குப் போன் செய்து சிவா என்னை அவமானப்படுத்திவிட்டார் என்று அழுது புலம்பினாராம். ஸ்டாலினும் உடனே சிவாவுக்குப் போன் செய்து, ‘‘என்ன நீங்கள் சீனியர் என்று கனியிடம் சொன்னீர்களாமே...? எந்த சீனியர் என்றாலும் தலைவர் குடும்பத்திற்குப் பிறகுதான். கனி யாரென்று தெரியும்தானே..?‘ என்று எச்சரிக்கும் தொணியில் பேசினாராம்.

அதைக் கேட்டு சிவா கடுமையான அப்செட். ஆனாலும் இதுகுறித்து ஸ்டாலினிடம் நேரில் பேசி நிலவரத்தைச் சொல்ல நினைத்தாராம். ஏன் கொடுத்தீர்கள் என்று அதிகாரமாக கேட்காமல், அன்பாகப் பேசியிருந்தால் நானும் அன்பாகப் பேசியிருப்பேன் என்று சொல்ல நினைத்தாராம். அதற்காக சென்னைக்கு வந்தார்.


   சென்னையில் 24ம் தேதி கூட்டப்பட்ட மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்..க்கள், நாடாளுமன்ற பொறுப்பாளர்களுக்கான கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட சிவா, நேரம் கிடைக்கும்போது ஸ்டாலினிடம் பேச நினைத்தாராம். சிவா அருகே சென்ற நேரத்தில் எல்லாம் வேண்டுமென்றே ஸ்டாலின் விலகிச் சென்றாராம். ஸ்டாலினுக்கு நெருக்கமான தலைவர் ஒருவரிடம் தகவல் சொல்லி, விளக்கம் சொல்ல நேரம் கேட்டாராம்.


   அவரும் ஸ்டாலினிடம் சென்று தகவல் சொல்ல, ‘அவர் ரொம்ப சீனியராம். அந்த மாதிரி சீனியார்கிட்டே பேச நான் தயாரா இல்லை‘ என்று சொல்லி அனுப்பிவிட்டாராம். அதனால் கடுப்பான சிவா, உடனே அங்கேயிருந்து கிளம்பிவிட்டார். மரியாதை, மானம் இல்லாமல் இனியும் தி.மு..வில் இருக்க வேண்டுமா என்று அவரது ஆதரவாளர்கள் கோபத்தை தூண்டி விடுகிறார்களாம்.. அதனால் எங்கே போகலாம் என்று கட்சியைத் தேடிவருகிறார் சிவா.

விருப்பமான கட்சிகள் எல்லாம் கை தூக்குங்கப்பா... சிவாவை சேர்த்தா புஷ்பா இலவசம்.