எவ்வளவு வருமானம் வந்தபோதும் பஞ்சம் மட்டும் விடியவே மாட்டேங்குது. வீட்டில் தீராத கஷ்டம் அதோடு மனசுல சில இனம் புரியாத பயம்..
பணக்கஷ்டம் தீர மேலை நாடுகளில் கூட இந்த பரிகாரங்களை கடைப்பிடிக்கின்றனராம்! நீங்களும் முயற்சி செய்து பாருங்க!

செய்யும் வியாபாரம், தொழிலில் நெருக்கடி, இது ஏதோ செய்வினை கோளாறு போல் உள்ளது என்று வருந்துபவர்களுக்கு ஒரு எளிமையான பரிகாரம்.
வீட்டில் தினமும் சமைப்பதற்காக அரிசி எடுக்கும்போது அதில் ஒரு கைப்பிடி அளவு அரிசியை தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். இப்படி 21 நாட்கள் ஒரு கைப்பிடி அரிசியை எடுத்து சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
இருபத்தியோரு நாட்கள் முடிந்து மறுநாள் சேமித்து வைத்த அரிசியைக் கொண்டு தயிர் சாதம் செய்து ஏதாவது ஒரு சிவாலயத்தில் அன்னதானம் செய்ய வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் உங்களுக்குத் தெரியாமலேயே மேலே சொன்ன அனைத்து பிரச்சனைகளும் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.
அடுத்ததாக வீட்டில் பணம் சேர மேலை நாடுகளிலும் வடமாநிலங்களிலும் கடைபிடிக்கப்படும் ஒரு சிறிய எளிய பரிகாரங்கள். வீட்டின் தென்கிழக்கு மூலையில் ஒரு கண்ணாடி பாத்திரத்தில் அல்லது மண் பாண்டத்தில் நீர் விட்டு அதில் சில கொத்துமல்லி இலைகளைப் போட்டு வைக்கவும். இதை தினசரி புதிதாக செய்யவும்.
சமையல் அறையில் சிறிது அரிசியை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் முதலில் குடும்பத்தலைவர் கையால் ஓரிரு நாணயங்களை இட்டு அரசியல் புதையுமாறு செய்யவும். அதன் பிறகு மற்ற குடும்ப உறுப்பினர்களும் அதில் ஓரிரு நாணயங்களை இட்டு புதையுமாறு வைக்கலாம்.
வீட்டில் எப்போதும் அரிசியும் செல்வமும் இருந்து கொண்டே இருக்க பண்டைய காலத்தில் செய்து வந்த ஒரு முறை இது. ஆறு மாதத்துக்கு ஒரு முறை இதை மாற்றி விடலாம். நாணயங்களில் எடுத்துக்கொண்டு அரிசியை காக்கைக்கு வைத்து விடவேண்டும்.
வீட்டின் பின்புறம் கற்றாழை செடி ஒன்றை வளர்த்து வர வீண் செலவுகள் குறைந்து பணம் சேரும். வீட்டின் தென்கிழக்கு மூலையில் இரண்டு கையளவு சோளத்தை மஞ்சள் துணியில் முடிந்து தொங்கவிடலாம். 6 மாதத்துக்கு ஒருமுறை சோளத்தை மாற்றிவிட வேண்டும். பழைய சோளத்தை பறவைகளுக்குப் போட்டுவிடலாம்.