உயிரை பணயம் வைத்து வந்தேன்! இப்டி பண்ணிட்டிங்களே அண்ணாச்சி! திருடன் எழுதிய உருக்கமான கடிதம்!

திருட வந்த கடையின் கல்லாப்பெட்டியில் பணம் இல்லாததால் ஏமார்ந்து போன திருடன் அந்த கடை உரிமையாளருக்கு ஒரு கடிதத்தை எழுதி வைத்த சம்பவம் நெய்வேலி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .


நெய்வேலியில் உள்ள மந்தாரக்குப்பம் பகுதியில் ஜெயராஜ் என்ற வியாபாரி மளிகை கடை நடத்தி வருகிறார் . இரவு வியாபாரம்  முடிந்தவுடன் வழக்கம் போல் கடையை மூடி விட்டு சென்ற கடை உரிமையாளர் ஜெயராஜ் ,அடுத்த நாள் காலை கடையை  திறந்தவுடன் பொருட்கள் சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார் .

பின்னர் சென்று பார்த்த போது கடையின் உள்ளே சென்று பார்த்தபோது கடையின் மேற்கூரையை உடைத்து திருடர்கள் வந்தது தெரியவந்துள்ளது . இரவில் கடைக்கு திருட வந்த திருடன் கல்லாப்பெட்டியை பார்த்ததும் அதில் பணம் இல்லாததை அறிந்ததும் கோபத்தில் அங்குள்ள பொருட்களை எல்லாம் கீழே தள்ளிவிட்டு நாசமாக்கி சென்றுள்ளான்.

அதோடு நிறுத்திக் கொள்ளாமல் உயிரை பணயம் வைத்து திருடன் வந்தா காசு இல்லாம கல்லாவை தொடச்சு வச்சி என்ன ஏமாற்றலாமா , அதுக்காகத்தான் இந்த குரங்கு வேலை என ஒரு பேப்பரில் கடிதம் எழுதி வைத்து அந்த திருடன் சென்றுள்ளான் .

கடையின் உரிமையாளர் ஜெயராஜ் , கடையை நாசம் செய்த திருடன் மேல் போலீசில் புகார் அளித்துள்ளார் . வித்தியாசமான முறையில் நடந்த இந்த  திருட்டு அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது