சாத்தான்குளம் தந்தை - மகன் படுகொலை! போலீசுக்கு எதிராக கிளர்ந்து எழுந்த இந்தியா! ஜெயம் ரவி டூ ஷிகர் தவான்! அடுத்து என்ன?

கோவில்பட்டி அருகே உள்ள சிறையில் தந்தை, மகன் இருவரையும் சிறையில் விசாரணைக் கைதிகளாக அழைத்து சென்று மரணம் அடைந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், பல திரைப்பிரபலங்களும் சமூக வலைதளங்கள் மூலம் அவர்களின் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.


கோவில்பட்டியில் அமைந்துள்ள கிளைச் சிறையில் விசாரணைக் கைதிகளாக இருந்த சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் அடுத்தடுத்து மரணம் அடைந்த சம்பவம் தமிழகத்தையே மிகுந்த அதிர்வு அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா ஊரடங்கு இருக்கும் வேளையில் விதிகளை மீறி கடையை திறந்து வைத்தாக கூறி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, அடித்துக் கொன்றதாக உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இந்நிலையில், இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் மிகுந்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது தமிழகம் மட்டுமின்றி திரைத்துறையை சேர்ந்த பல பிரபலங்களும் பல கண்டனங்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். அவர்கள் தங்களின் கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.