நிஜ துப்பாக்கியுடன் கோவை வந்திறங்கிய தல அஜித்! காரணத்தை கேட்டா அசந்து போய்டுவீங்க!

கோவையில் நடைபெற்று வரும் தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் நடிகர் அஜித்குமார் பங்கேற்று அசத்தியுள்ளார் .


தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிகள் இந்த மாதம் 28ஆம் தேதி தொடங்கப்பட்டு ஆகஸ்ட் மாதம் இரண்டாம் தேதி வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது .

இதில் பல்வேறு ரைபிள் கிளப் சார்ந்த உறுப்பினர்கள் போட்டியாளர்களாக பங்கேற்றனர். இந்நிலையில் இன்று சென்னை ரைபிள் கிளப் உறுப்பினரான நடிகர் அஜித்குமார் பத்து மீட்டர் ஏர் பிஸ்டல் சூட்டிங் பிரிவில் பங்கு பெற்றார் . 

போட்டியில் பங்கேற்க கோவை வந்த தல அஜித்தை  ரசிகர்கள் உற்சாகப்படுத்தினர். ஏற்கனவே நடிகர்  அஜித் குமார் திரைத்துறை மட்டுமில்லாமல் கார் ரேஸ் ,விமான பைலட் போன்ற வித்தியாசமான செயல்களில்  தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .