தீபாவளியை முன்னிட்டு அரசாணை வெளியிட்ட தமிழக அரசு !! மகிழ்ச்சியில் மக்கள்!

தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டு அரசாணை பிறப்பித்துள்ளது நம்முடைய தமிழக அரசு.


நடப்பாண்டின் தீபாவளி பண்டிகை வரும் 27ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்கு மறுநாள் திங்கள் கிழமை என்பதால் ஊருக்கு செல்வோர் பணிக்கு திரும்புவது மிகவும் கடினம் என்பதால் வரும் திங்கட்கிழமை 28ஆம் தேதியன்று அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த சில தினங்களாகவே மக்கள் அனைவருமே வரும் 28-ம் தேதியை அரசு விடுமுறை நாளாக அறிவிக்கக்கோரி கோரிக்கை வைத்திருந்தனர். ஏனெனில் சொந்த ஊருக்கு செல்வோர் , மறுநாள் வேலை நாள் என்பதால் ஊருக்கு திரும்புதல் மிகவும் சிரமப்படுவர் என்பதால் கோரிக்கை அரசின் முன் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது இதனை ஏற்ற தமிழக அரசாங்கம் வரும் அக்டோபர் 28 ஆம் தேதியை அரசு விடுமுறை நாளாக அறிவித்துள்ளது. 

இந்த விடுமுறை நாளை ஈடுசெய்யும் விதமாக வரும் நவம்பர் 9ஆம் தேதியை பணி நாளாக அறிவித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் வரும் சனி ஞாயிறு திங்கள் ஆகிய மூன்று நாட்களும் தொடர் விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அறிந்த தமிழக மக்கள் மகிழ்ச்சியில் திளைத்து உள்ளனர்.