அந்த வீடியோவை ஏண்டா ரிலீஸ் பண்ணுன..? சசிகுமார் தலை மயிரை பிடித்து ஆய்ந்த 4 பெண்கள்! அதிர வைக்கும் காரணம்!

சென்னை தாம்பரம் அருகே மடத்தில் பாலியல் தொல்லை தருவதாக சிறுவர்கள் பேசிய வீடியோ வைரலான நிலையில் வீடியோ வெளியிட்ட இளைஞரை 2 பெண்கள் சரமாரியாக வெளுத்து வாங்கினர்.


சென்னை தாம்பரம் அடுத்த சதானந்தபுரத்தில் சதானந்த சுவாமிகள் மடத்தில் தங்கியிருக்கும் 2 சிறுவர்கள் ஒரு வீடியோவில் பேசினர். அதில் மடத்தில் தாங்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாகவும் தங்களை போலவே சில சிறுவர்கள் வெளியில் சொல்ல முடியாமல் அவதிப்படுவதாகவும் பேசி இருந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. பின்னர் இந்த விவகாரத்தில் போலீசார் தலையிட்டு அனைத்து சிறுவர்களையும் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

ஆனால் இந்த வீடியோ வெளியிட்டது அந்த மடத்திற்கு கடந்த 25 ஆண்டுகளாக வந்து செல்லும் சசிகுமார் என்பது மடத்தின் பெண் நிர்வாகிகளுக்கு தெரியவந்தது. அவர்தான் அந்த சிறுவர்களை பேச வைத்து வீடியோ வெளியிட்டதாக கூறப்படுகிறது. கடைசியில் பொய்யான தகவலின் பேரில் மடத்தில் இருந்த சிறுவர்களை அழைத்து சென்றுவிட்டதாக மடத்தின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே மடத்தின் தற்போதைய நிலையை அறிந்து கொள்ள சசிகுமார் அங்கு வந்துள்ளார். உடனடியாக அங்கிருந்த பெண்கள் அவரை பிடித்து இழுத்து சென்று அடிக்கத் தொடங்கினர். மடத்தை பற்றி ஏன் தப்பாக பேசினாய்? பொய்யான தகவல்கள் கூறி மடத்தின் பெயரை கேடுத்துவிட்டாயே என சூழ்ந்து கொண்டு அடித்தனர். மேலும் ஆத்திரம் தீராத பெண்கள் அவரது தலைமுடியை இழுத்து உலுக்கினர். எந்தந்த பொருட்களை கொண்டு தாக்கமுடியுமா அப்படி தாக்கினர். இதனால் வலி தாங்க முடியாமல் அய்யோ, அம்மா என்னை கொல்றாங்களே என அலறினார் சசிகுமார்.

பின்னர்தான் உண்மை வெளிவந்தது. மடத்திற்கு அடிக்கடி வரும் சசிகுமார் கஞ்சா அடிப்பாராம். அதை அங்கிருந்த பெண்கள் தட்டிக் கேட்டதால் ஆத்திரத்தில் மடத்தில் உள்ள சிறுவர்களை வீடியோவில் பேச வைத்துள்ளார். தற்போது சசிகுமார் பெண்களிடம் அடிவாங்கும் வீடியோவும் வைரலாகி வருகிறது