கன்னியாகுமரி பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேச்சு..
திமுகவை வழிநடத்துவது கருணாநிதி தான்! ஸ்டாலினை மேடையில் வைத்துக் கொண்டு கலாய்த்த ராகுல்!

மு.க ஸ்டாலின்தான் அடுத்த தமிழக முதல்வர்.நான் பலமுறை கருணாநிதியை சந்தித்து இருக்கிறேன்.அவரை சந்தித்தது எனக்கு பெரிய மகிழ்ச்சி அளித்தது.கருணாநிதியிடம் நிறைய பேச வேண்டும் என்று நினைத்து இருக்கிறேன். கருணாநிதி திமுகவை இப்போதும் வழி நடத்தி வருகிறார்.அவர் நம்முடன்தான் வாழ்ந்து வருகிறார். தமிழகத்தின் வளர்ச்சியில் இரண்டற கலந்தவர் கருணாநிதி. 2019 தேர்தல் தமிழக மக்களின் உரிமை குரலாக இருக்கும். தமிழக அரசு மோடியின் கைப்பாவையாக உள்ளது. தமிழக மக்கள் போராட்ட குணம் கொண்டவர்கள்.
உண்மையை காக்க தமிழக மக்கள் உயிரையும் கொடுப்பார்கள் .பிரதமர் மோடிக்கு பொய் பேசுவது மட்டுமே வேலை மோடி ஆட்சிக்கு வரும் முன் ரூ.15 லட்சம் அளிப்பதாக கூறினார் ஆனால் அவர் ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. மக்களை வறுமையில் தள்ளி இருக்கிறார் மோடி.
தமிழக மக்களுக்கும், தமிழுக்கும் மோடியால் ஆபத்து ஏற்பட்டு இருக்கிறது. மத்தியில் இருந்து கொண்டு மாநில அரசுகளை மோடி அடக்கி ஆள்கிறார்.மோடியால் தமிழ்நாட்டை இனியும் கட்டுப்படுத்த முடியாது தமிழக மக்கள் அதை எப்போதும் அங்கீகரிக்க மாட்டார்கள்.