இந்து கடவுளான ஸ்ரீ ராமபிரானின் திருஉருவச்சித்திரமானது வளைகுடா நாடுகளில் ஒன்றான ஈராக் நாட்டில் இருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ஈராக் மலைப்பகுதியில் ஸ்ரீராமரின் சிற்பம்! கண்டுபிடித்த ஆய்வாளர்களை பிரமிப்பு!

வளைகுடா நாடுகளில் மிகவும் சர்ச்சைக்குரிய நாடாக ஈராக் திகழ்கிறது. இங்கு இந்திய அகழ்வாராய்ச்சி குழுவினர் சிந்துசமவெளி நாகரிகத்தை பற்றியும் மெசபொடோமியா நாகரீகத்தை பற்றியும் ஆராய்ச்சி செய்ய சென்றனர்.
ஈராக் நாட்டில் தர்பந்த்-ஐ- பெலுலா ("Darband-I-Belula") என்ற பழம்பெரும் மலை அமைந்துள்ளது. இங்கு நம் நாட்டின் குழுவினர் சென்றபோது, மலையின் ஒரு பகுதியில், ஆண் ஒருவர் கையில் வில்லேந்தி, தன் இடுப்பில் வாள் சொருகி, மேலாடை அணியாது நின்று கொண்டிருப்பது போன்றும், அவரை ஒருவர் வணங்குவது போன்றும் செதுக்கப்பட்டிருந்தது.
நம் குழுவினர், வில்லேந்தி இருப்பவரை ராமர் என்றும், அவரை வணங்குபவர் அனுமர் என்றும் கண்டறிந்தனர்.இந்த செய்தியை இந்திய வெளியுறவுத்துறையிடம் அகழ்வாராய்ச்சிக்கு சென்ற அவர்கள் கூறியுள்ளனர். வெளியுறவுத்துறை அந்த கல்வெட்டு பற்றிய குறிப்புகளை எடுத்துவர கூறியுள்ளனர்.
ஈராக் நாட்டின் குறியீடுகளில், அந்த சிற்பமானது பழங்குடியினரின் அரசனை குறிப்பதாகவும், அவனை ஒரு கைதி வணங்கி நிற்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈராக் நாட்டில் கண்டறிந்த அதிசயத்தின் மாதிரியை, எடுத்துவந்து உத்தரப்பிரதேசத்தில் உள்ள அயோத்தியில் அமைந்துள்ள ராமர் கோவிலில் ஒப்பீடு செய்யுமாறு அகழ்வாராய்ச்சி குழுவினருக்கு இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.