என் கணவன் மட்டும் அல்ல.. பல ஆண்களுடன் நிரஞ்சனாவுக்கு தொடர்பு..! கோடம்பாக்கம் ஸ்ரீயின் மனைவி நான்சி வெளியிட்ட புகைப்படம்!

ஆண்களை மயக்கி பணம் சம்பாதிக்கும் வேலை பார்க்கும் நிரஞ்சனி, தன் கணவர் மீது பொய்ப் புகார் அளித்துள்ளதாக ஸ்ரீயின் மனைவி பதிலடி கொடுத்துள்ளார்.


நிரஞ்சனிக்கு ஸ்ரீ பல கோடி ரூபாய் செலவு செய்திருப்பதாகவும் அவர் இரக்க சுபாவம் கொண்டவர் என்பதால் மிரட்டி நிரஞ்சனி பணம் பறிக்க முயல்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். அகில இந்திய இந்து மகா சபாவின் தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீ என்கிற ஸ்ரீகண்டன். சபாவின் பொது செயலாளர் நிரஞ்சனி, ஸ்ரீ மீது பாலியல் புகார் அளித்துள்ளார்.

திருவள்ளூர் வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்த நிரஞ்சனி இதுகுறித்து சென்னை மாநகர காவல் ஆணையரிடம் அளித்த புகாரரில், 2016 முதல் இந்து மகா சபாவில் மகளிர் அணியில் பணிபுரிந்து வருகிறேன். ஸ்ரீக்கு இந்தி தெரியாததால் டெல்லிக்கு செல்லும்போதெல்லாம் தன்னையும் அழைத்து செல்வார். பின்னர் ஸ்ரீயால் நான் சபாவுக்கு பொதுச் செயலாளர் ஆனேன்.

இதையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறினார். 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2-வது வாரத்தில் எனக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுக்கத் தொடங்கினார். மிரட்டல் விடுத்தார். என் ராஜினாமா கடிதத்தை ஏற்காமல் மீண்டும் சபாவுக்கு வருமாறு அழைத்தார். நான் செல்லாததால் மிரட்டல் விடுக்கிறார்.

சகோதரர் திருமணத்திற்காக தனக்கு தரவேண்டிய பணத்தை கொடுக்குமாறு கேட்டேன். கொடுக்காமல் ஏமாற்றி வருகிறார். எனவே அவரால் என் குடும்பத்தினருக்கு ஆபத்து உள்ளது. நீதி வேண்டும்" என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து போலீசார் ஸ்ரீ மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ததும், ஸ்ரீ தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே ஸ்ரீயின் மனைவி நான்ஸி சென்னை கமிஷனர் அலுவலகம் வந்து நிரஞ்சனி மீது புகார் அளித்துவிட்டு பேட்டி அளித்தார். "நிரஞ்சனி ஆண்களை மயக்கியே பணத்தை கறக்க கூடியவர். பலருடன் அவர் நெருக்கமாக இருந்துள்ளார் என சில போட்டோக்களை காண்பித்தார். ஸ்ரீ ரொம்பவும் இரக்க சுபாவம் உடையவர் என்பதால் கோடி ரூபாய் வரை ரஞ்சனிக்கு செலவு செய்திருக்கிறார். செப்டம்பர் மாதம் ஸ்ரீ பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறும் ஸ்ரீ அவருடைய சகோதரர் கல்யாணத்திற்கு ஏன் அழைக்க வேண்டும் என கேள்வி எழுப்பினார்.

நிரஞ்சனியின் சகோதரர் திருமணத்திற்காக 20 லட்சம் ரூபாய் கடன் தந்துள்ளார் ஸ்ரீ. அந்த பணத்தை கேட்டதால்தான் இப்படி ஒரு பொய் புகார் என் கணவர் மீது தந்துள்ளார்.. இதனிடையே, நான்சியின் சகோதரரும் வக்கீலுமான சார்லஸ் அளித்த பேட்டியில், கணவர் வெங்கட் ராவை, சுபாஷ் என்பவரோடு சேர்ந்து துப்பாக்கியால் சுட்டுகொன்ற வழக்கில் 2வது குற்றவாளி நிரஞ்சன் என்ற அதிர்ச்சி தகவல் தெரிவித்தார்.