திதிகளின் தெய்வங்களை வணங்கிவந்தாலே திதி சூன்யத்திலிருந்து நாம் காப்பாற்றப்படுவோம்.
திதிகளின் தேவிகள் இவர்கள்தான்? திதி சூன்யத்திலிருந்து விடுதலை தெரியும் தரிசனம்!

இருந்தாலும் திதிகளின் நித்யா தேவிகளையும் அறிந்து கொள்வோம். இந்த திதி நித்யாதேவிகளே திதி சூன்யத்தை முற்றிலுமாக நீக்க வல்லது என்பது சத்தியம், திதி நித்யா தேவியர் பதினைந்து பேர்,இவர்களில் யார் யார் எந்த திதிக்கு உரியவர்கள் என்பதைப் பார்ப்போம்.
முதலில் - வளர்பிறை திதிகள்-
பிரதமை - ஶ்ரீகாமேஷ்வரி நித்யா
துவிதியை(துதியை)- ஶ்ரீபகமாலினி நித்யா
திருதியை - ஶ்ரீநித்யக்லின்னா நித்யா
சதுர்த்தி - ஶ்ரீபேருண்டா நித்யா
பஞ்சமி - ஶ்ரீவஹ்னி நித்யா
சஷ்டி - ஶ்ரீவஜ்ரேஸ்வேரி நித்யா
சப்தமி - ஶ்ரீசிவதூதி நித்யா
அஷ்டமி - ஶ்ரீத்வரிதா நித்யா
நவமி - ஶ்ரீலஸீந்தரி நித்யா
தசமி - ஶ்ரீநித்யா நித்யா
ஏகாதசி - ஶ்ரீநீலபதாகா நித்யா
துவாதசி - ஶ்ரீவிஜயா நித்யா
திரயோதசி - ஶ்ரீஸர்வமங்களா நித்யா
சதுர்தசி - ஶ்ரீஜ்வாலாமாலினி நித்யா
பௌர்ணமி -ஶ்ரீசித்ரா நித்யா
தேய்பிறை திதி நித்யாக்கள்:
பிரதமை - ஶ்ரீசித்ரா நித்யா
துவிதியை(துதியை) -ஜ்வாலாமாலினி நித்யா
திருதியை- ஶ்ரீஸர்வமங்களா நித்யா
சதுர்த்தி - ஶ்ரீவிஜயா நித்யா
பஞ்சமி - ஶ்ரீநீலபதாகா நித்யா
சஷ்டி - ஶ்ரீநித்ய நித்யா
சப்தமி - ஶ்ரீலஸீந்தரி நித்யா
அஷ்டமி - ஶ்ரீத்வரிதா நித்யா
நவமி - ஶ்ரீசிவதூதி நித்யா
தசமி - ஶ்ரீவஜ்ரச்வேரி நித்யா
ஏகாதசி - ஶ்ரீவாஹ்னி நித்யா
துவாதசி - ஶ்ரீபேருண்டா நித்யா
திரயோதசி - ஶ்ரீநித்யக்லின்னா நித்யா
சதுர்தசி - ஶ்ரீபகமாலினி நித்யா
அமாவாசை - ஶ்ரீகாமேஷ்வரி நித்யா
சரி... இவர்கள் எந்தெந்த ஆலயத்தில் வீற்றிருக்கிறார்கள்? இவர்கள் எல்லா ஆலயங்களிலும் இருக்கிறார்கள், சந்நிதியில் காட்சி தருபவர்களாக அல்ல.. சூட்சும வடிவமாக இருக்கிறார்கள். எப்படி?
மிக சக்தி வாய்ந்ததும், பிரபஞ்ச ஆற்றலையே தன்னுள் அடக்கிவைத்திருக்கும், தெய்வசக்தியையும் சாந்நித்தியத்தையும் வெளிப்படுத்துவதுமான ஶ்ரீசக்கரம் நீங்கள் அறிந்ததுதான்!
இந்த ஶ்ரீசக்கரத்தின் சக்தியை இந்த பிரபஞ்சத்திற்கு சரியான அளவீட்டு முறையில் பகுத்துத் தருவது இந்த நித்யா தேவியரின் கடமை. இவர்கள் இந்த ஶ்ரீசக்கரத்தின் மையப்பகுதியின் முதல் சுற்றுப்பகுதியான முக்கோணத்தில் வாசம் செய்கிறார்கள். ஶ்ரீசக்கரத்தின் வெளிப்புறம் இருப்பதே நித்யா தேவியரின் சூட்சும வடிவம். ஶ்ரீசக்கரத்தை வீட்டில் வைத்து முறையாக வணங்கி வந்தால் போதும், உங்கள் திதி சூன்ய தோஷம் முற்றிலும் விலகி , நன்மைகள் பெருகும் என்பது உறுதி.
முன்னோர்க்கு தர்ப்பணம் தரும்போதும் மறக்காமல் அந்தந்த திதிக்கான நித்யாதேவியரை வணங்கி வந்தால் இன்னும் சிறப்பான எதிர்காலம் உண்டாகும்.