டிராபிக் ராமசாமி படத்தின் வெளிநாட்டு உரிமத்திற்காக ரூபாய் 21 லட்சம் வாங்கியதாகவும் ஆனால் அதனை திருப்பி கொடுக்கவில்லை என்றும் பிரமானந்தம்சுப்பிரமணியம் என்பவர் அளித்த புகார் உண்மை தான் என்கிற ரீதியில் எஸ்ஏசி கூறியுள்ள விளக்கம் பலரையும் அதிர வைத்துள்ளது.
ரூ.21 லட்சம் வாங்கியது உண்மை..! திருப்பி கொடுக்கவில்லை..! கனடா தமிழரை ஏமாற்றியதை ஒப்புக் கொண்ட எஸ்ஏசி!

நேற்று முன் தினம் கனடாவை சேர்ந்த பிரமானந்தம் சுப்ரமணியம் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்தார். அதில் டிராபிக் ராமசாமி படத்தின் வெளிநாட்டு உரிமைக்கு ரூ.21 லட்சம் கொடுத்ததாகவும் ஆனால் அதனை பெற்றுக் கொண்ட எஸ்ஏசி படத்தையும் கொடுக்காமல் பணத்தையும் கொடுக்காமல் தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறியிருந்தார்.
மேலும் பணத்தை கேட்டடால் தன்னை கொலை செய்துவிடுவதாகவும், தன்னையும், தனது மகனையும் பார்த்து ஆட்சியாளர்களே மிரண்டு போய் இருப்பதாகவும் கூறியதாக பிரமானந்த்ம் கூறியிருந்தார். இந்த புகார் பரபரப்பான நிலையில் இன்று எஸ்ஏசி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்தார்.
அதன் பிறகு பேசிய எஸ்ஏசி, எனது தயாரிப்பில் எடுக்கப்பட்ட டிராபிக் ராமசாமி படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமத்தை 50 லட்சம் ரூபாய்க்கு அளிக்க ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால் பிரமானந்தத்தால் 20 லட்சத்து 62 ஆயிரம் மட்டுமே என்னிடம் கொடுக்க முடிந்தது. மீதமுள்ள 30 லட்சம் ரூபாய் பணத்தை அவர் எனக்கு கொடுக்கவில்லை.
இதனால் எங்கள் இருவருக்கும் இடையிலான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. வேறொருவர் படத்தை வாங்கினால் மட்டுமே பிரமானந்தம் கொடுத்த 21 லட்சத்தை திரும்ப கொடுப்பது என்பது ஒப்பந்தம். ஆனால் படத்தை யாரும் வாங்கவில்லை. அந்த படத்தை நானே வெளியிட்டேன்.
இதனால் பிரமானந்தம் சுப்பிரமணியத்திற்கு அவரது பணத்தை திருப்பி அளிக்கவில்லை. இவ்வாறு எஸ்ஏசி கூறியுள்ளார். என்னதான் ஒப்பந்தமாக இருந்தாலும் கூட படத்தை எஸ்ஏசி சொந்தமாக ரிலீஸ் செய்த பிறகு பிரமானந்தம் கொடுத்த பணத்தை கொடுத்திருப்பது தான் நியாயம் என்கிறார்கள்.
மேலும் இந்த பேட்டியின் மூலம் எஸ்ஏசி தான் ரூ.21 லட்சத்தை வாங்கிவிட்டு திருப்பி கொடுக்கவில்லை என்பதை வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளார்.