ரவுண்டு கட்டி சதம் அடித்த ரஹானே! பதிலடி கொடுப்பாரா ரிஷாப் பாண்ட்?

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான ipl போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்களை குவித்துள்ளது.


டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி , ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை  பேட்டிங் செய்ய பணித்தது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய சஞ்சு சாம்சன் ரன் ஏதும் எடுக்காமல் ரன் அவுட் ஆனார். பின்னர் களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித் ரஹானே உடன் இணைந்தார். ஸ்டீவ் ஸ்மித் அதிரடியாக விளையாடி 32 பந்துகளில் 50 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

சிறப்பாக விளையாடிய ரஹானே டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் பந்து வீச்சை அடித்து நொறுக்கினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ரஹானே சதம் விளாசினார். இவர் 63 பந்துகளில் 105 ரன்களை குவித்தார். இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்களை குவித்தது. டெல்லி அணியின் ரபாடா 2 விக்கெட்களை வீழ்த்தினார்.