வயதான ஆண்மகன் தான் வேண்டும்! பிரபல நடிகையின் நூதன சபலம்!

தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படத்தில் நடித்து வரும் நடிகையான ரகுல் ப்ரீத் சிங்க் தற்போது ஹிந்தி திரையுலகில் கால் பதித்து உள்ளார். இவர் தற்போது டீ டீ பியார் டீ என்ற ஹிந்தி திரைப்படத்தில் நடித்துள்ளார் .


இந்த திரைப்படம் இந்த மாதம் 17 -ம் தேதி திரைக்கு வர காத்திருக்கிறது. இந்த திரைப்படத்தில் முன்னணி நடிகரான அஜய் உடன் ரகுல் ப்ரீத்  சிங்க்  நடித்துள்ளார்.  இதில் ஹீரோவான அஜய்கு ஏற்கனவே திருமணம் ஆகி பிரிந்த நிலையில் தன்னை விட 20 வயது குறைந்த ரகுல் ப்ரீத் சிங்குடன் காதலில் விழுவதாக இந்த படம் அமையும் என்று படக் குழுவினர் தெரிவித்தனர்.

இந்த திரைப்படம் தொடர்பாக ரகுல் ப்ரீத் சிங்குடன் பிரபல பத்திரிகை நிறுவனம் பேட்டி எடுத்தது.  அப்போது பேசும்போது  பத்திரிக்கையாளர் அதிர்ச்சியூட்டும் விதமாக ஒரு கேள்வி எழுப்பினார்.  அதாவது " டீ டீ பியார் டீ என்ற திரைப்படத்தில் வரும் ஹீரோவை போல வயதானவரை உங்கள் வாழ்க்கை துணையாக ஏற்று கொள்ள தயாரா? "என்றார் .

இதற்கு சற்றும் யோசிக்காமல் ரகுல் ப்ரீத் சிங் நான் தயார் என்று பதில் அளித்தார்.  இதனை பற்றி பேசும்போது வயது என்பது ஒரு எண் மட்டுமே என்றும், என்னை விட வயதில் மூத்தவராக இருந்தாலும் எனக்கு பிடித்து இருந்தால் திருமணம் செய்து கொள்ள தயார் என்றும் கூறினார்.