முழுவதும் வார்னிஸ்! பளபளப்புடன் விரைவில் வெளியாகப்போகும் புதிய 100 ரூபாய் நோட்டு!

டெல்லி: வார்னிஷ் அடித்த ரூ.100 நோட்டுகளை அறிமுகம் செய்ய ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.


ரிசர்வ் வங்கி, தனது 2018-19ம் ஆண்டறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், ரூ.100 நோட்டுகளின்  வாழ்நாளை நீட்டிக்கும் வகையில், அவற்றுக்கு வார்னிஷ் அடித்து அறிமுகம் செய்யப் போவதாகக் கூறப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக, சோதனை முறையில் இந்த நோட்டுகள் புழக்கத்திற்கு கொண்டுவரப்படும் என்றும், அதனை பொறுத்து முழு வீச்சில் நாடு முழுவதும் இதே முறையில் நோட்டுகள் வார்னிஷ் அடித்து அறிமுகம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.  

ஏற்கனவே, 2017-18ம் ஆண்டறிக்கையிலும் இதே கருத்தை ரிசர்வ் வங்கி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த ஆண்டு கண்டிப்பாக புதிய ரூபாய் நோட்டுகள் வார்னிசுடன் அறிமுகம் ஆகும் என்கிறார்கள்.