பொள்ளாச்சியில் பயங்கரம்! கால்வாய்க்குள் பாய்ந்த சொகுசு கார்! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் ஜல சமாதி!

பொள்ளாச்சி அருகே கால்வாயில் கார் கவிந்த விபத்தில் 4 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைஅ சேர்ந்த 8 பேர் பலியாகினர்.


கோவை மசக்களிபாளையத்தைச் சேர்ந்த கேபிள் ஆபரேட்டர் பிரகாஷ். பிரகாஷின்  குடும்பம், அவரது அண்ணன் பன்னீர்செல்வத்தின் குடும்பம் மற்றும் பிரகாஷின் அக்கா சுமதி ஆகியோர் பழனி கோயிலுக்கு காரில் சென்றபோது அவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை தாங்கள் வீடு திரும்பப் போவதில்லை என.

தரிசனம் முடிந்து தங்கள் நிசான் காரில் அவர்கள் கோவைக்குத் திரும்பிக் கொண்டிருந்த அவர்களை சற்றும் எதிர்பாராத வகையில் விதியும் அதிகாலை இருளும் சூழ்ந்தது. பொள்ளாச்சியை அடுத்த கெடிமேடு பி.ஏ.பி. கால்வாய் அருகே அதிகாலை இருள் ஓட்டுநரின் கண்ணை மறைக்க கால்வாயின் தடுப்புச் சுவர் மீது மோதிய வேகத்தில் கட்டுப்பாட்டை இழந்து காற்றில் பறந்த கார் கால்வாய்க்குள் கவிழ்ந்தது. 

காரின் கதவு ஜன்னல்கள் லாக் செய்யப்பட்டிருந்த நிலையில் தண்ணீருக்குள் விழுந்த வேகத்தில் கதவுப் பூட்டுகள் செயலிழந்து திறக்க முடியாத நிலை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் மூச்சுத் திணறி பிரகாஷ், அவரது மனைவி சித்ரா, அவர்களது 8 வயது மகள் பூஜா  பிரகாஷின் அக்கா சுமதி, பிரகாஷின் அண்ணன் மனைவி லதா, லதாவின் குழந்தை 9 வயது மகள் தாரணி ஆகியோர் காருக்குள்ளேயே உயிரிழந்தனர். 

இந்நிலையில் பொழுது விடிந்த போது கார் ஒன்று தலைகுப்புற கால்வாயில் கிடந்ததைக் கண்ட மக்கள்  அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீஸார்  கிரேன் மூலம் காரை மீட்டனர். காருக்குள் இருந்த 6 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.