லாக்கப் அருகே நின்றுகொண்டு பெண் காவலர் ஒருவர் டிக்டாக் வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு உள்ள சம்பவமானது குஜராத் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போலீஸ் ஸ்டேசனில் பெண் போலீஸ் செய்யுற காரியமா இது? வைரல் வீடியோ!

குஜராத் மாநிலத்தில் மெஹசானா என்ற மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்திற்கு உட்பட்ட லங்காஜ் காவல் நிலையத்தில் அர்பிதா சவுத்ரி என்பவர் பெண் காவலராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் வழக்கமாக டிக்டாக் வீடியோக்களில் நடிப்பதை பொழுதுபோக்காக கொண்டவர். ஆடலும் பாடலும் என்று பல வீடியோக்களை அவர் டிக்டாக் செயலில் பதிவேற்றம் செய்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் இவர் பதிவேற்றம் செய்த வீடியோ சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. காவல்நிலையத்தின் லாக்-அப் அருகே நின்று அவர் டிக் டாக் வீடியோ ஒன்றை எடுத்து வெளியிட்டுள்ளார். வெளியிட்ட சில மணிநேரத்திலேயே பல்வேறு கண்டனக் குரல்களை இந்த வீடியோ பெற்றது.
வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், காவல் நிலையத்தில் சினிமா பாடலுக்கு நடனமாடி வெளியிடுவது காவல்துறைக்கு களங்கம் விளைவிக்கும் செயல் என்று தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த செய்தியானது பரபரப்பாக தொடங்கியவுடன் வீடியோவானது உயர் அதிகாரிகளின் பார்வைக்கு சென்றுள்ளது.
உயர் அதிகாரிகள் அர்பிதா சவுத்ரி மீது காவல் நிலையத்தில் சீருடை இல்லாமல் இருந்தது, காவல் நிலையத்தில் காவலர்கள் பின்பற்ற வேண்டியது கட்டளைகளை பின்பற்றாமல் இருப்பது ஆகிய குற்றங்களை பதிவு செய்துள்ளனர். மேலும் அவரை சஸ்பெண்ட் செய்து குஜராத் மாநில காவல்துறை ஆணையர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த சம்பவமானது குஜராத் மாநில காவல்துறையினர் இடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.