ரூ.7 லட்சம் வழிப்பறி! கத்தியை காட்டி பணத்தை பறித்த போலீஸ்காரர்கள்! வேலூரில் அதிர்ச்சி சம்பவம்!

தமிழகத்தில் கடந்த மாதம் 18-ம் தேதியன்று மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. வேலூர் தொகுதியில் மட்டும் பணப்பட்டுவாடா காரணமாக தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் வேலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட சில ஜோலார்பேட்டை அடுத்த கட்டேரி பகுதியில் பெரும் பணப்புழக்கம் இருந்தது. இந்த பகுதியும் தேர்தல் ரத்தாவதற்கு முக்கிய பங்கு வகித்தது.தேர்தலுக்கு இரண்டு நாட்கள் முன்னதாக பணபட்டுவாடா செய்ய ரூ.7 லட்சம் ரூபாயை அதிமுக நிர்வாகிகள் எடுத்து சென்று கொண்டிருந்தனர்.

விஜயரங்கன், தமிழ்மணி ஆகிய இருவரும் குற்றப்பிரிவு ஆய்வாளர்கள். இவர்கள் இருவரும் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்து சென்றுள்ளனர்.  இந்த சம்பவம் குறித்து மாவட்ட கண்காணிப்பாளரான  பரவேஷ்குமாரிடம் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் இரு ஆய்வாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.அந்த இரண்டு காவலர்களையும் பணியிடைநீக்கம் செய்ய‌ பரமேஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.