சொந்தமாக 100 வீடுகள்..! கட்டுக்கட்டாக ரொக்கப் பணம்! வேலூர் சாராய சாம்ராஜ்ய ராணி மகேஸ்வரி! ரெய்டு போன போலீசை மிரள வைத்த சம்பவம்!

குடும்பத்தினருடன் சாராயம் காய்ச்சி வந்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்து சொத்துக்களை அரசுடைமையாக்க முயன்று வரும் சம்பவமானது வாணியம்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி என்ற இடம் அமைந்துள்ளது. இதற்கு உட்பட்ட நேதாஜி நகர் என்ற இடத்தை சேர்ந்தவர் மகேஸ்வரி. இவர் மீது ஏற்கனவே 35க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன. மேலும் ஏற்கனவே 10 முறைக்கு மேல் குண்டர் சட்டத்திலும் கைதாகியுள்ளார். சிறைக்கு சென்று 4-5 மாதங்களிலேயே ஜாமீனில் வந்து விடுவார். ஆனால் அப்போதும் மகேஸ்வரி திருந்தாமல் தொடர்ந்து போதைப்பொருட்களை விற்று வருவதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.

இந்நிலையில் சமூகத்திற்கு விரோதமான பல்வேறு நடவடிக்கைகளில் நகைசுவை குடும்பத்தினருடன் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளியாகின. அப்போது காவல்துறையினர் பெண் காவல் ஆய்வாளர் தலைமையில் மகேஸ்வரியின் வீட்டு சுற்றிவளைத்தனர். பின்னர் தாக்குதல் மேற்கொண்ட போது 20 லட்சம் ரொக்க பணம், மற்றும் 21 கிலோ கஞ்சா பொட்டலங்கள் முதலியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

அப்போது மகேஸ்வரியின் குடும்பத்தினர் காவல்துறையினரை தாக்கியுள்ளனர். தாக்குதலில் பெண் காவல்துறை அதிகாரியான சத்யா என்பவருக்கு கையில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. வீட்டில் ஏற்பட்ட கலவரத்தில் மகேஸ்வரி என் கணவரும் அவருடைய மூத்த மகனும் தப்பி சென்றுவிட்டனர்.

ஆனால் மகேஸ்வரி, மகேஸ்வரியின் மருமகள், மகேஸ்வரியின் இளையமகன் மற்றும் மகேஸ்வரியின் அக்காள் மகள் ஆகிய நால்வரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்கள் மட்டுமின்றி 3 சிறுவர்களையும் காவல்துறையினர் கைது செய்து சீர்திருத்தப் பள்ளியில் அனுமதித்துள்ளனர்.

இந்நிலையில் வாணியம்பாடி சூப்பரின்டென்டன்ட் விஜயகுமார் அவர்கள் மகேஸ்வரியின் மொத்த சொத்துக்களையும் அரசுடமை ஆக்குவதில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். மகேஸ்வரி செய்திகளும் அட்டூழியங்களுக்கு எதிராக வாணியம்பாடி மக்கள் புகார் அளிக்க பயப்படுகிறார்கள் என்றும், புகார் அளிப்பவர்களை மகேஸ்வரியின் ஆட்கள் கடுமையாக தாக்குகின்றனர் என்றும் கூறப்படுகிறது. 

இந்த சம்பவமானது வாணியம்பாடி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.