குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கோலம் போட்டு போராட்டம் நடத்திய 7 பேரை காவல்துறையினர் கைது செய்ததற்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
வீட்டு முன்புறம் கோலம் போட்டு முறை வாசல் செய்த பெண்களை தூக்கிய போலீஸ்..! அதிர்ச்சி காரணம்!

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்கள் மத்திய அரசு அமல்படுத்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பல்வேறு தரப்பினரையும் காவல்துறையினர் கைது செய்த வண்ணமுள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை சென்னை பெசன்ட் நகர் பகுதியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக 7 பேர் சாலையில் கோலம் போட்டு போராட்டம் நடத்தினர். அந்த கோலத்தில் மத்திய அரசுக்கு எதிரான தகவல்களையும் வரைந்து வைத்திருந்தனர். இந்நிலையில் காலையில் காவல்துறையினர் அவர்கள் அனைவரையும் கைது செய்தனர்.
இந்த அநாகரிக செயல்பாட்டிற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. அத்தகைய கண்டனங்களுக்கு பிறகு அவர்களை காவல்துறையினர் விடுவித்தனர். இந்த சம்பவமானது பெசன்ட் நகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.