அரசுப் பேருந்தை மறித்து நடுரோட்டில் டிக்டாக்! கெத்து காட்டிய இளைஞனுக்கு சுத்து போட்ட போலீஸ்! ரூ.1 லட்சம் பைக் பறிபோன பரிதாபம்!

அரசு பேருந்தை மறித்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளது கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சம்பந்தப்பட்ட இளைஞர் ஒருவர் சில நாட்களுக்கு முன்னர் இருசக்கர வாகனத்தில் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். பேருந்தின் முன்னர் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி "என்னதான் நடக்கும் நடக்கட்டுமே" என்ற பாடலுக்கு டிக்டாக் செய்துள்ளார். 

இந்த சம்பவம் குறித்த வீடியோ பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. வீடியோவானது கடலூர் காவல்துறை கண்காணிப்பாளர் வரை சென்றது. மற்ற இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக இதுபோன்ற வீடியோக்கள் இருந்து விடக்கூடாது என்பதற்காக சம்பந்தப்பட்ட இளைஞரை பிடிக்குமாறு அவர் உத்தரவிட்டிருந்தார். 

ராமநத்தம் காவல்துறையினர் வீடியோவிலிருந்த இளைஞரை கைது செய்தனர். அந்த இளைஞரின் பெயர் அஜித் என்பதை காவல்துறையினர் கண்டறிந்தனர். உடனடியாக காவல்துறையினர் அந்த இளைஞரை காவல்நிலையத்தில் வைத்து அடித்துள்ளனர்.

டிக்டாக்கில் "குமுறு டுப்புறு" பாடலைப் பாடி வெளியிட்ட அஜித்தை காவல்துறையினர் 2 வழக்குகளில் கைது செய்தனர். இதுபோன்ற சில வீடியோக்களை அவர் முன்னதாகவே வெளியிட்டுள்ளார். அதாவது, குடும்பத்தில் இருந்த ஒரு பச்சிளம் குழந்தையை தரையில் படுக்க வைத்து மிகவும் ஆபத்தான முறையில் தொங்கி, மேலிருந்து கீழே விழுவது போன்று வீடியோ எடுத்த டிக்டாக்கில் வெளியிட்டிருந்தார். 

தற்போது அஜித் கைது செய்யப்பட்டிருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.