இந்தியாவின் மிகப்பெரிய சில்லறை வர்த்தக சந்தையை பிடிக்க அமேசான் மற்றும் வால்மார்ட் போன்ற நிறுவனங்கள் போட்டிப் போட்டு வரும் நிலையில் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டர்ஸ்ட்ரீஸ் நிறுவனம் இந்திய சில்லறை வர்த்தகத்தில் அதிரடி காட்டி வருகிறது.
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ்க்கு நல்ல நேரமடா... சில்லறை வர்த்தகத்தில் அதிரடி

இந்திய சில்லறை வர்த்தகத்தில் 5வது இடத்தில் இருக்கும் ரிலையன்ஸ் நிறுவனம் தனது வர்த்தகத்தை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்ல தீர்மானித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக சில்லறை வர்த்தகத்தில் உள்ள சக போட்டி நிறுவனமான பியூச்சர் குரூப் நிறுவனத்தைக் வாங்க ரிலையன்ஸ் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், தற்போது இந்தப் பேச்சுவார்த்தை அடுத்த கட்டத்தை அடைந்துள்ளது.
பியூச்சர் ரீடைல் நிறுவனம் பிக் பஜார், நீல்கிரிஸ், ஈசிடே போன்ற பெயரில் நாடு முழுவதும் சுமார் 1,500 கிளைகளும். பியூச்சர் லைப்ஸ்டைல் நிறுவனத்தின் கீழ் சென்டரல், பிராண்ட் பேக்டரி போன்ற பெயரில் சுமார் 500 கடைகள் இயங்கி வருகிறது.
இந்தியா முழுவதும் சுமார் 2000 கடைகளைக் கொண்ட பெரிய அளவிலான நிறுவனத்தை வாங்குவது என்பது, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சில்லறை வர்த்தகப் பிரிவுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் என்று தான் சொல்ல வேண்டும். ஏற்கனவே கோவையைச் சேர்ந்த ‘ஸ்ரீ கண்ணன் டிபார்மண்டல் ஸ்டோர்ஸ்’ எனும் நிறுவனத்தை ரிலையன்ஸ் இண்ட்ஸ்டிரீஸ் ரூ.152.5 கோடிக்கு கையகப்படுத்தியுள்ளது. ரிலையன்ஸ் இன்ஸ்டஸ்டிரீஸ் துணை நிறுவனமான, ரிலையன்ஸ் ரீடைல் வென்சர்ஸ் மூலம் 100 சதவீத பங்குகளை வாங்கியுள்ளது.
ஏற்கனவே ரிலையன்ஸ் ரீடைல் பிரிவில் இருக்கும் மளிகை பொருட்கள், லைப்ஸ்டைல் பொருட்களின் வர்த்தகம் இந்திய சில்லறை விற்பனை துறையில் உயரந்து வரும் நிலையில் தற்போது பியூச்சர் குரூபபின் இந்த மிகப்பெரிய சங்கிலி தொடர் ஒப்பந்தம் உறுதியாகி உள்ளதாக ரிலையன்ஸ் தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
மிகப்பெரிய நுகர்வோர் மையமாக இருக்கும் தனியார் ஈக்விட்டி நிறுவனமான எல் கேட்டர்டன் நிறுவனம், ரிலையன்ஸ் ஜியோ நிறூவனத்தின் 0.39 சதவீத பங்குகளை சுமார் ரூ .1894 கோடிக்கு வாங்கியுள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தொழில்நுட்ப பிரிவில் நடக்கும் பத்தாவது முதலீடு இதுவாகும்.
கடந்த ஏப்ரல் மாதம் ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு ரிலையன்ஸ் ஜியோவின் 9.99 சதவீத பங்குகள் ரூ .43,574 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது. ஜெனரல் அட்லாண்டிக், சில்வர் லேக் (இரண்டு முறை), விஸ்டா ஈக்விட்டி பார்ட்னர்ஸ், கே.கே.ஆர், முபாதலா முதலீட்டு நிறுவனம் மற்றும் ஏ.டி.ஐ.ஏ மற்றும் டி.பி.ஜி ஆகிய நிறுவனங்கள் ஜியோவில் வரிசையாக தங்கள் முதலீடுகளைச் செய்துள்ளன.
ரிலையன்ஸ் பிரெஷ்,. ரிலையன்ஸ் ஸ்மார்ட் உள்ளிட்ட சில்லறை விற்பனை நிறுவனங்களைக் கொண்டுள்ள ரிலையன்ஸ் சில்லறை நிறுவனம் எதிர்கால இந்தியாவில் கிளைவிட்டு பரவ தயாராகி வருகிறது.
மணியன் கலியமூர்த்தி