விபத்தில் காயம் அடைந்த குழந்தை மற்றும் அவரது பெற்றோரை காப்பாற்றி அமைச்சர் மருத்துவமனையில் சேர்த்தது அனைவரையும் நெகிழச் செய்தது.
விபத்தில் காயம் அடைந்து துடித்த குழந்தை! ஓடோடிச் சென்று உதவிய அமைச்சர்!

தமிழகத்தில் மக்களவை மற்றும் 19 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஒரு கட்டமாக நடைபெறுகிறது. இதனையடுத்து திமுக,அதிமுக மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தங்கள் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர்.பிரச்சாரத்திற்காக விருதுநகர் மாவட்டம் சென்ற பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்கள் அந்த பகுதியில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.
திருச்சுழி அருகே இரண்டு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட நிலையில் வாகனத்தில் சென்ற குழந்தை உட்பட பெற்றோர்களும் பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நிலையில் அந்த வழியாக பிரச்சாரத்திற்கு சென்ற பால்வளத்துறை அமைச்சர் அவர்களை காப்பாற்றி தனது காரிலேயே அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.
விபத்தில் மயங்கிய குழந்தையை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.இதனையடுத்து அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மனிதாபிமானத்துடன் நடந்துகொண்டது பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.