போதை தலைக்கேறிய நபர் இருசக்கர வாகனத்தில் ஏறுவதற்கு சிரமப்படும் வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
முன்னாடி போனா பின்னாடி! பின்னாடி வந்தா முன்னாடி! குடிகார நண்பனால் இளைஞர் பட்டபாடு! வடிவேலு காமெடி!

சமூக வலைத்தளங்களில் இன்று ஒரு வீடியோ வெளியானது. அந்த வீடியோவில் மதுபோதையில் ஒரு நபர் தள்ளாடிக்கொண்டிருந்தார். அவருடைய நண்பர் அவரை இருசக்கர வாகனத்தில் ஏற்றி செல்ல முயற்சித்தார். ஆனால் அவர் ஏற முடியாமல் தடுமாறினார்.
பின்னர் ஒரு வழியாக அவர் இருசக்கர வாகனத்தில் ஏறிக்கொண்டார். ஏறிக்கொண்ட அவரால் தடுமாற்றத்தை குறைத்து கொள்ள இயலவில்லை. பின்னர் இருசக்கர வாகனம் விழுந்தது. இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை பார்த்த பலர் வடிவேலு நடித்த நகைச்சுவை காட்சியை நினைவுகூர்ந்து கமெண்ட்டுகளை பதிவு செய்துள்ளனர்.